Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 30, 2016

செல்போனில் ஆபாச படம்; கண்டித்த இளம்பெண் கொலை; வாலிபர் கைது


மேட்டுபாளையம் அருகே செல்போனில் ஆபாச படம் பார்த்ததை கண்டித்த இளம்பெண்ணை கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.


மேட்டுபாளையத்தை அடுத்து மோத்தேபாளையத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ(16) என்பவர் வாழை தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தினேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

கொலை குறித்து தினேஷ் காவல் துறையினரிடம் விசாரணையில் கூறியதாவது:-

கடந்த 22ஆம் தேதி வாழை தோட்டத்தில் செல்போனில் ஆபாச படம் பார்த்து கொண்டு இருந்தேன். அப்போது அந்த வழியில் சென்ற ஜெயஸ்ரீ என்னை கண்டதும், இதுகுறித்து என் பெற்றோரிடம் கூறுகிறேன் என்றார். நான் அவரை கண்டித்ததோடு, அவரை உல்லாசத்திற்கு அழைத்தேன்.

உடனே அவர் ஆபாச படம் பார்த்ததே தவறு, அதோடு என்னை அழைப்பது இன்னும் அசிங்கமானது. இதை கட்டாயம் உன் பெற்றோரிடம் கூறுகிறேன் என்றார். நான் எங்கே வீட்டில் சொல்லிவிடுவாரோ என்ற அச்சத்தில் அவரை தாக்கி, கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டேன், என்று கூறினார்.

மேலும் காவல் துறையினர் ஜெயஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.