Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 5, 2016

பூமியில் இருந்து வெகு தொலைவிற்கு சென்ற சூரியன் !


நேற்று மதியம் 12.24 மணிக்கு பூமியில் இருந்து வெகு தொலைவிற்கு சென்றது சூரியன்.

பூமி சூரியனைச் சுற்றி வருகையில் குறிப்பிட்ட நாளில் அவை இரண்டும் மிக அருகிலும், குறிப்பிட்ட நாளில் மிகவும் தூரத்திலும் இருக்கும். இந்நிலையில் நேற்று மதியம் 12.24 மணிக்கு சூரியன் பூமியிலிருந்து வெகு தொலைவிற்கு சென்றது.

அதாவது 94 மில்லியன் கிமீ தொலைவிற்கு சென்றது. ஒவ்வொரு ஜனவரி மாதமும் சூரியன் பூமிக்கு மிக அருகில் வரும். அதே போன்று ஒவ்வொரு ஜூலை மாதமும் சூரியன் பூமிக்கு வெகு தூரத்தில் செல்லும். நேற்று பூமியிலிருந்து வெகு தொலைவிற்கு சென்றது சூரியன். நேற்று மதியம் 12.24 மணிக்கு இந்த நிகழ்வு நடந்தது.

இந்த நிகழ்வின் போது சூரியன் பூமியிலிருந்து 94 மில்லியன் கி.மீட்டர் தூரத்திற்கு சென்றது. அதேசமயம் மீண்டும் சூரியன் பூமிக்கு மிகவும் அருகில் ஜனவரி மாதம் வரும்.

அனைத்து கோள்களுமே சுழற்ச்சியின்போது சூரியனுக்கு அருகில் வருவதும், தொலைவில் செல்வதும் இயல்பே. சூரியன் என்னதான் பூமிக்கு அருகில் வந்தாலும் வெப்பம் அதிகமாகாமல் இருப்பதற்கு பூமியின் அமைப்பே காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.