மராத்வாடா பிராந்தியத்தில் தினமும் குறைந்தது 3 விவசாயிகள் கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர் என அப்பகுதியில் வறட்சி நிலவரத்தை கண்காணித்துவரும் அதிகாரிகள் தெரிவித்தனர். விவசாயிகளின் துயர் துடைக்க அரசு பல்வேறு நிவாரண உதவிகள் செய்துள்ளது. தற்கொலை முடிவை கைவிடும்படி பல்வேறு சமூகநல அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அப்படி இருந்தும் தினமும் விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்கின்றனர். அதிகபட்சமாக பீட் மாவட்டத்தில் தான் 85 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அந்த மாவட்டம் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக நாண்டெட்டில் 74 விவசாயிகளும், அவுரங்காபாத்தில் 72 விவசாயிகளும், லாத்தூர், உஸ்மனாபாத்தில் தலா 47 விவசாயிகளும், ஜால்னா, பர்பனி மாவட்டங்களில் முறையே 44, 27 விவசாயிகளும் தற்கொலை செய்து மடிந்துள்ளனர். கடந்த 5 மாதத்தில் 473 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
இதுவரை தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளில் அரசின் நிவாரண உதவிகளுக்கு தகுதியானவர்கள் என 4,73,233 விவசாயிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 217 விவசாயிகளின் உறவினருக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த உதவிகளை மாவட்ட நிர்வாகம் நேரடியாக வழங்கி உள்ளன. இதனிடையே 106 விவசாயிகள் குடும்பத்தினரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 134 விண்ணப்பங்கள் மீது விசாரணை நடந்து வருகிறது. விசாரணைகள் முடிந்தபிறகு அதில் தகுதியுடையவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என மாவாட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.