ஃபேப்ரிக், எம்ப்ராய்டரி, க்வில்லிங், டெரகோட்டா, ஃப்ளவர் மேக்கிங் என கிராஃப்ட்டின் எல்லா ஏரியாக்களிலும் எக்ஸ்பெர்ட், இதில் 15 வருட அனுபவமிக்க விக்டோரியா. சென்னை, வடபழனியில் உள்ள ‘டீனா ஆர்ட் அண்ட் கிராஃப்ட்’ ஷோரூம் உரிமையாளரான இவர், கிராஃப்ட் பயிற்சி வகுப்புகளும் எடுக்கிறார். இங்கே, டியூப்லெக்ஸ் ஷீட் (Duplex Sheet) பயன்படுத்தி செம்பருத்திப் பூ செய்வதைக் கற்றுத்தருகிறார்!
‘‘வீடு, பள்ளி, அலுவலக அலங்காரத்துக்கு மற்றும் பரிசளிப்பதற்கு என இந்தப் பூக்களுக்கான வரவேற்பு உள்ளது. எளிய செலவில், குறைந்த நேரத்தில் செய்யும் இந்தப் பூக்களை ஆர்டரின் பேரில் செய்துகொடுத்தால், லாபக் கணக்கு எழுத நோட் வாங்க வேண்டியதுதான்!’’ என்று ஆர்வம் தூண்டியவர், செயலில் இறங்கினார்...
தேவையான பொருட்கள்:
டியூப்லெக்ஸ் ஷீட் (சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில்), பச்சை நிற டேப், போலன்கள், நூல், ஃபெவிக்கால், ஸ்டெம் கம்பி, கத்தரிக்கோல், சார்ட் பேப்பர் (சிறியது).

செய்முறை:
படம் 1: சார்ட் பேப்பரை செம்பருத்திப் பூவின் இதழ் வடிவத்தில் கட் செய்துகொள்ளவும்.
படம் 2: சிவப்பு நிற டியூப்லெக்ஸ் ஷீட் மீது இதழை வைத்து, அதே வடிவத்தில் 10 இதழ்கள் வெட்டிக்கொள்ளவும்.
படம் 3: இதேபோல சிவப்பு நிற டியூப்லெக்ஸ் ஷீட்டை மகரந்தத்துக்கு தோரண வடிவிலும், பச்சை நிறை டியூப்லெக்ஸ் ஷீட்டை இலை மற்றும் இதழடி பகுதிகளுக்கு படத்தில் காட்டியுள்ளபடியும் வெட்டி எடுத்துக்கொள்ளவும்.

படம் 4: சிவப்பு நிற டியூப்லெக்ஸ் ஷீட் இதழின் நடுவில் நரம்புபோல கம்பியை வைத்து கட் செய்து, ஃபெவிக்காலால் ஒட்டவும்.
படம் 5: இப்போது அதே இதழின் மேற்புறம் ஃபெவிக்கால் தடவி கம்பி தெரியாதவாறு இன்னொரு இதழை வைத்து மூடவும். இதேபோல ஐந்து இதழ்கள் செய்துகொள்ளவும்.
படம் 6: கம்பியோடு போலன்களை வைத்து நூலால் சுற்றிக்கொள்ளவும்.
படம் 6 a: ஏற்கெனவே தோரண வடிவில் வெட்டி வைத்திருக்கும் சிவப்பு நிற டியூப்லெக்ஸ் ஷீட்டில் ஃபெவிக்கால் தடவி, அந்தக் கம்பியில் சுற்றி ஒட்டவும். இப்போது பூவின் நடுப்பாகம் தயாராகிவிட்டது.
படம் 7: போலனைச் சுற்றி ஒவ்வொரு இதழையும் சீரான இடைவெளியில் வைத்து, அடிப்பகுதியில் நூல்கொண்டு சுற்றவும்.

படம் 8: அடிப்பகுதிக்காக வெட்டி வைத்துள்ள பச்சை நிற டியூப்லெக்ஸ் ஷீட்டை, பூவின் அடியில் ஃபெவிக்கால் தடவி சுற்றி ஒட்டவும்.
படம் 9: இறுதியில், பூவுக்குக் கீழ் நீண்டிருக்கும் கம்பி தெரியாதவாறு பச்சை நிற டேப்பை கம்பியின் அடிப்பாகம் வரை சுற்றி, நடுநடுவே வெட்டி வைத்திருக்கும் இலைகளைச் சேர்த்துக்கொள்ளவும்.
படம் 10: இப்போது கண்ணைப் பறிக்கும் செம்பருத்திப் பூ தயார்!
``இதை நூறு ரூபாய் முதல் விலை வைத்து விற்கலாம். இதேபோல பல பூக்கள் செய்து, `செம்பருத்தி பொக்கே’வும் செய்யலாம். வேலையும், கற்பனையும், அழகும் அதிகமாக அதிகமாக, விலையையும் ஏற்றி விற்கலாம்!’’ என்று வெற்றிப் பாதையில் நடைபோட வழிகாட்டுகிறார் விக்டோரியா.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.