Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 12, 2016

உங்கள பாதுகாக்கணும்னா இதச் செய்யுங்க மொதல்ல..! கமிஷனர் தரும் கலகல டிப்ஸ்!


குற்றங்களைத் தடுக்க காவல்துறையினருடன் பொதுமக்கள் இணைந்து செயல்படுவதோடு, வீட்டின் கதவில் பாதுகாப்பு சங்கிலி பொருத்த வேண்டும் என்றும், வீட்டின் உள்ளிருந்து வெளியே பார்க்கும் வகையில் கதவில் லென்சு பொருத்த வேண்டும் என்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் தெரிவித்தார்.

சென்னை நகரில் குற்றங்களைத் தடுக்க குடியிருப்பு நலச்சங்கங்களுடன் மாநகர காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன், கலந்தாய்வு கூட்டம் நடத்தி வருகிறார். துரைப்பாக்கத்தில் நேற்று நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், கண்ணகி நகர், எழில் நகர், ஒக்கியம் துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்பு நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், காவல்துறை இணை ஆணையர் டி.எஸ்.அன்பு, அடையாறு துணை ஆணையர் அபினவ்குமார், உதவி ஆணையர் அசோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் கலந்து கொண்டு மக்களிடம் குற்றங்களைக் குறைப்பது குறித்த கருத்துகளைக் கேட்டு அறிந்தார்.

அப்போது பேசிய அவர், "வீட்டின் கதவில் பாதுகாப்பு சங்கிலி பொருத்த வேண்டும். வீட்டின் உள்ளிருந்து வெளியே பார்க்கும் வகையில் கதவில் லென்சு பொருத்த வேண்டும். வீட்டிற்குள் அத்துமீறி யாராவது நுழைந்தால் எச்சரிக்கும் வகையில், ‘அலாரம்’ பொருத்துங்கள். குடியிருப்பில் உள்ள அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். வேலைக்காரர்களை நியமிக்கும்போது நன்கு விசாரித்த பின்னர், அவர்களை வேலைக்குச் சேர்க்க வேண்டும். காஸ் சிலிண்டர், தண்ணீர் கேன், பால் கொண்டு வரும் நபர்கள் மீது சரியான கவனம் செலுத்த வேண்டும். வெளியூர் செல்லும்போது போலீஸ் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

நகைகளுக்கு பாலிஷ் போடுவதாகக் கூறிக்கொண்டு வரும் நபர்களிடம் நகையைக் கொடுக்க வேண்டாம். தனியாக இருக்கும் பெண்கள், முதியவர்கள் ஆகியோர், அறிமுகம் இல்லாத நபர்களை வீட்டிற்குள் அனுமதிக்கக்கூடாது. வங்கிக்குச்  செல்லும் போதும், நகை, பணத்தை எடுத்துச் செல்லும்போதும், கீழே பணம் இருப்பதாகவோ அல்லது உங்கள் மீது அசிங்கம் பட்டுள்ளதாகவோ அல்லது அரிப்பை ஏற்படுத்தும் கெமிக்கல், இலை போன்ற பொருட்களைத் தடவிவிட்டுக் கவனத்தைத் திசைதிருப்பி பொருட்களைத் திருட முயற்சிக்கும்  நபர்களிடம் விழிப்பாக இருக்க வேண்டும். குற்றங்களைத் தடுக்க காவல்துறையினருடன் பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டும்" என்று கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.