Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 19, 2016

சருமம் மிருதுவாக்கும் சாக்லேட் ஸ்க்ரப்


சாக்லேட் சுவை, ஆரோக்கியத்திற்கு மட்டுமன்றி அழகிற்கும் அற்புதம் செய்யும். முகப்பரு, வயதாகும் அறிகுறி ஆகியவற்றை மறையச் செய்யும். சருமத்தில் களையே இல்லையே என யோசிப்பவர்களுக்கு ஏற்ற ஸ்க்ரப் இதுதான். 

இந்த சாக்லெட் ஸ்க்ரப் எல்லா சருமத்திற்கும் ஏற்றது. இவற்றில் பாக்டீரியாக்களின் எதிர்க்கும் ஆற்றல் உள்ளது. இதனால் முகப்பருக்கள் மீது செயல் புரியும். இந்த ஸ்க்ரப் அழுக்கு, இறந்த செல்கள் ஆகியவற்றையும் அகற்றிவிடும்.

தேவையான பொருட்கள் : 

பொடித்த சர்க்கரை - 1 கப் 
நாட்டுச் சர்க்கரை - 1 கப் 
புதினா எண்ணெய் - 2 டீஸ்பூன் 
கோகோ பவுடர் - 1 ஸ்பூன் 
ஆலிவ் எண்ணெய் - 1 கப்

சர்க்கரை, கோகோ பவுடர், நாட்டுச் சர்க்கரை இவற்றை முதலில் கலந்து, இவற்றில் புதினா மற்றும் ஆலிவ் எண்ணெயை கலந்து, ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். இதிலுள்ள புதினா எண்ணெய் முகப்பருக்களை விரட்டும். கருமையை நீக்கிவிடும். சர்க்கரை சருமத்தை மென்மையாக்கும். கோகோ ஆழமாக சுத்தம் செய்து, இறந்த செல்களை அகற்றும். 

இந்த ஸ்க்ரப் வாரம் மூன்று முறை சிறிது எடுத்து, முகம், கழுத்து, கைகளில் தேய்த்து குளிக்கலாம். கிடைக்கும் பலன் அற்புதமானது. சருமம் மிருதுவாகி, எந்த வித தழும்புகளும் இல்லாமல் மிளிர்வதற்கு இந்த ஸ்க்ரப் உத்திரவாதம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.