Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 28, 2016

பாஜக எம்.பி சேதி பாஸ்வானின் எம்.பி பதவியை பறித்தது பாட்னா உயர் நீதிமன்றம்


பீகார் மாநில பாஜகவை சேர்ந்த சேதி பாஸ்வான் அங்குள்ள சசாராம் மக்களவை தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். சேதி பாஸ்வான் மக்களவை தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் சில தகவல்களை மறைத்ததாகவும், அவரது எம்.பி பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பாட்னா நீதிமன்றம் சேதி பாஸ்வானின் எம்.பி பதவியை ரத்து செய்து இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பால் அதிர்ச்சி அடைந்துள்ள சேதி பாஸ்வான்,  தான் திட்டமிட்டு எந்த ஒரு தகவலையும் மறைக்கவில்லை  எனவும் தீர்ப்பை எதிர்த்து கண்டிப்பாக மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது சேதி பாஸ்வான் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் தனக்கு எதிராக உள்ள கிரிமினல் வழக்குகள் பற்றிய தகவல்களை குறிப்பிடவில்லை என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.