Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 2, 2016

சுவாதி கொலை வழக்கில் தொடர்புடைய நபர் செங்கோட்டையில் கைது செய்யப்பட்டார்


சென்னையில் மென்பொறியாளர் சுவாதியை கொலை செய்த கொலையாளி நள்ளிரவு கைது செய்யப்பட்டான்.


சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி, கடந்த மாதம் 24ல் மர்ம நபரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தப்பிச் சென்ற கொலையாளியை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். போலீசாருக்கு கிடைத்த சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் குற்றவாளியின் மாதிரி வரைபடத்தை போலீசார் வெளியிட்டனர். தொடர்ந்து பல இடங்களிலும் கொலையாளியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், சுவாதியை கொலை செய்த கொலையாளி நள்ளிரவில் நெல்லையில் கைது செய்யப்பட்டான்.

கொலையாளியின் பெயர் ராம்குமார் என்றும், போலீசார் தன்னை நெருங்கியதை அறிந்த அவன், கழுத்து அறுத்து தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, கொலையாளி ராம்குமார் கைது செய்யப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

போலீசாரால் கைது செய்யப்பட்ட ராம்குமார், 24 நெல்லை மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவன்; பி.இ., பட்டதாரி. வேலை தேடி சூளைமேடில் தங்கியிருந்த ராம்குமார், சுவாதியை ஒருதலையாக காதலித்துள்ளான். கடந்த 3 மாதங்களாக முயற்சித்தும் சுவாதி காதலை ஏற்காததால் வெறுப்படைந்த ராம்குமார் நண்பன் ஒருவன் உதவியுடன் கொலை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலையாளி ராம்குமாரை சென்னை கொண்டுவர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராம்குமாரின் தந்தை பரமசிவம், தாய், சகோதரி உள்ளிட்ட 4 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சூளைமேட்டில் ராம்குமார் தங்கியிருந்த மேன்சனிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அறுவை சிகிச்சை:ராம்குமாரின் கழுத்தில் எக்ஸ்ரே எடுக்கப்பட்ட பின், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப்பின் ராம் குமார் பேச ஆரம்பித்தான். அவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.