July 24, 2016
நாட்டில் மதம் என்பது பயங்கரவாதமாக மாறிவருகிறது - திருமாவளவன்
நாட்டில் சாதீயம் பேராபத்தாகவும், மதம் என்பது பயங்கரவாதமாகவும் மாறிவருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் உயிரிழந்த நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தாமிரமணி ஆற்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தலித்துகள் மீது கடுமையான அடக்குமுறை தொடுக்கப்படுவதாகவும், சாதீய ஆணவ படுகொலைகள் அதிகரித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். சாதிய ஆணவ படுகொலையை தடுக்கும் விதமாகவும் பெண்களை பாதுகாப்பதற்க்கும் தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தினார்.
முன்னதாக. தாமிரபரணி ஆற்றில் உயிர் நீத்த 17 மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களு புதிய தமிழகம் கட்சி, பாரதிய ஜனதா, மற்றும் இடது சாரிகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது
நாட்டில் மதம் என்பது பயங்கரவாதமாக மாறிவருகிறது - திருமாவளவன்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 24, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 24, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.