July 4, 2016
மாணவிகளிடம் பாலியல் சேட்டை : ஆசிரியர்களின் விளக்கமறியல் நீடிப்பு
யாழ்.நகருக்கு அண்மித்த பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவிகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்த 4 ஆசிரியர்களையும், எதிர்வரும் 18ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சசிதரன் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு விசாரணை இன்று (திங்கட்கிழமை) யாழ்.நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்றைய தினம், ஆசிரியர்கள் சார்பில் 5 பேர் கொண்ட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மாணவிகளிடம் ஆசிரியர்கள் தகாத முறையில் ஈடுபட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர், சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர்கள் மற்றும் குற்றத்தை மறைக்க முயற்சித்த அதிபர், ஆசிரியர் என நால்வர் கைதுசெய்யப்பட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை, இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடைய ஆசிரியர்களுக்கு இனிவரும் காலங்களில் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படுமென, அண்மையில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாணவிகளிடம் பாலியல் சேட்டை : ஆசிரியர்களின் விளக்கமறியல் நீடிப்பு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 04, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 04, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.