July 31, 2016
வரதட்சனை கேட்டு இளம்பெண்ணை கொலை செய்த கணவர், தாய் கைது!
பட்டதாரி இளம்பெண்ணை தூக்கிலிட்டு படுகொலை செய்த கணவர் மற்றும் அவருடைய தாய் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகேயுள்ள கேத்தாண்டப்பட்டி பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் திருப்பதிக்கும் (வயது 24), வேட்டபட்டு பகுதியை சேர்ந்த சித்ரா (வயது 20) என்ற பட்டதாரி பெண்ணுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது.
இந்நிலையில் தற்போது விடுப்பில் வந்த திருப்பதி, மனைவி சித்திராவிடம் வரதட்சனை தொகையான மூன்று லட்ச ரூபாயினை வாங்கி வரும்படி தாய் வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.
இதனை தொடர்ந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயினை மட்டுமே பெற்று வந்ததினால் ஆத்திரமுற்ற திருப்பதி, மனைவி சித்ராவை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் உடலை தொங்கவிட்டு தற்கொலை போன்று சித்தரித்துள்ளதாகவும் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து ராணுவ வீரர் திருப்பதியையும், அவருடைய தாயையும் நாட்றம்பள்ளி போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
வரதட்சனை கேட்டு இளம்பெண்ணை கொலை செய்த கணவர், தாய் கைது!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 31, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 31, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.