July 29, 2016
ஒருதலை காதலுக்கு எதிர்ப்பு, வாலிபர் தற்கொலை!
காரைக்கால் (23-0716): காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தில், ஒருதலை காதலுக்கு பெண் மற்றும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
காரைக்கால் திருமலைராயன்பட்டினம் படுதார்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் சத்தியமூர்த்தி(19). படிக்காமல் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில மாதமாக கூலிவேலையையும் ஒழுங்காக செய்யாமல், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
சத்தியமூர்த்தியின் காதலை சம்பந்தப்பட்ட பெண் ஏற்கவில்லை. அதேபோல், வாலிபரின் பெற்றோரும் வேலைக்கு போகாமல் காதல் என சுற்றிவந்தால் முன்னேற முடியாது என கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த வாலிபர், அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் நேற்று முன்தினம் புடவையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து, திருமலைராயன்பட்டினம் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஒருதலை காதலுக்கு எதிர்ப்பு, வாலிபர் தற்கொலை!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 29, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 29, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.