Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 10, 2016

ஜாகிர் நாயக் மற்றும் ஒவைசிக்கு எதிரான அவதூறு பிரச்சாரத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்!



இஸ்லாமிய அறிஞர் டாக்டர். ஜாகிர் நாயக் மற்றும் MIM தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உவைசி அவர்களுக்கும் எதிரான அவதூறு பிரச்சாரத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய தலைவர் K.M.ஷெரிப் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் தற்பொழுது இவ்விருவர் மீதும் அவதூறுகளை பரப்பி தவறானவர்களைப்போல் சித்தரிக்க சில வலதுசாரி அரசியல் குழுக்களும் மத்திய அரசும் முயற்சிக்கின்றன. ஆனால் இவ்விருவரும் முக்கிய பிரமுகர்கள் ஆவர் இவர்களது செயல்பாடுகளும் வெளிப்படையானவையே என்றும் கூறினார்.
டாக்டர். ஜாகிர் நாயக் அவர்கள் இஸ்லாமிய அறிஞர் மற்றும் அழைப்பாளர். அமைதியான வழிமுறையில் இஸ்லாமிய பிரச்சாரத்தை மேற்கொள்வதில் ஆர்வமுடையவர். அனைத்து சூழ்நிலையிலும் பயங்கரவாதத்தை கண்டித்தவர். அவரது அனைத்து உறவுகளும் சமூக தளத்தில் கிடைக்கப்பெறுவதோடு ஆயிரக்கணக்கான மக்கள் உலக முழுவதும் பார்வையாளர்களாய் உள்ளனர். அவரது உரையாடல்களை பார்ப்பவர்கள் அல்லது அவரை சமூக வலைதளங்களில் பின்பற்றுபவர்களின் செயல்களுக்கு டாக்டர்.ஜாகிர் நாயக்கை பொறுப்பேற்க சொல்வது பொருத்தமற்ற அபத்தமாகும். மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் புலனாய்வு அமைப்புகளின்  டாக்டர்.ஜாகிர் நாயக் அவர்களுக்கு எதிரான கூற்று உள் நோக்கம் கொண்டவை. இதன் மூலம் மத்திய அரசு டாக்டர்.ஜாகிர் நாயக்கின் கருத்து சுதந்திரத்தை பறிப்பதோடு சிறுபான்மையினரின் மத பிரச்சாரத்தை முடக்க முயற்சிக்கிறது.
அதே போல் ஹைதராபாத் குண்டுவெடிப்பு சதித்திட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியான உதவிகளை மேற்கொள்ள முன் வந்த ஒவைசிக்கு எதிராகவும் அவதூறு பரப்பப்பட்டு வருகின்றது. குற்றம் சாட்டப்பட்டவரின் மீது சில தவறுகள் இருப்பினும் சட்டரீதியான உதவிகளை பெறுவது எவ்வகை குற்றவாளி ஆயினும் அவரின் அடிப்படை உரிமை. எனவே இதை அடிப்படையாக வைத்து உவைசி பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றார் என்று கூறுபவர்கள் சட்டத்தை பற்றிய அடிப்படை அறிவு இல்லாதவர்கள் அல்லது உவைசி அவர்கள் அடைந்த அரசியல் வளர்ச்சியை கண்டு சகித்துக்கொள்ள முடியாதவர்கள் அவரை உள்நோக்கத்தோடு குறி வைக்கின்றனர்.
துருதிஷ்டவசமாகவும் இவ்விரு போலியான காரணங்களின் மூலம் சமூகத்தின் தலைவர்களையும் அமைப்புகளையும் மௌனமாக்கி அவர்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்க இந்துத்துவ சக்திகள் முயற்சிக்கின்றது. இதுபோன்ற முயற்சிகள் இறுதியில் பொது நலன்களுக்கு சீரழிவை ஏற்படுத்தும் என்றும் K.M.ஷெரிப் அவர்கள் தெரிவித்தார். மேலும் நாட்டில் உள்ள அறிவு ஜீவிகள் தங்களது மௌனத்தை கலைத்து டாக்டர்.ஜாகிர் நாயக் மற்றும் ஒவைசிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

இப்படிக்கு

மக்கள் தொடர்பு அதிகாரி,
பாப்புலர்  ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.