July 5, 2016
மீண்டும் கஞ்சியாகிறது மதுரை ஆதீனம்
இந்து மடாதிபதிகளில் எப்போதும் சர்ச்சைகளில் சிக்கி வரும் மதுரை ஆதீன பீடாதிபதி அருணகிரி மீண்டும் சர்ச்சைக்குள் சிக்கி உள்ளார். குறித்த ஆதீனத்தின் 292 ஆவது மடாதிபதியான இவர் இளைய ஆதீனமாக நித்தியானந்த சுவாமியை நியமித்து பலத்த சர்ச்சையில் சிக்கி இருந்தார். நித்தியானந்தாவை நீக்கி அந்த சர்ச்சையில் இருந்து தப்பிய இவருக்கு தற்போது மற்றுமொரு தலையிடி ஆரம்பித்துள்ளது.
கடந்த 2 ஆம் திகதி சென்னையில் நடந்த இப்தார் நோன்பு விருந்தில் இவர் பங்கேற்றிருந்தார். இவ் விருந்து அ.தி.மு.க வினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவும் இதில் பங்கேற்றிருந்தார்.
அ.தி.மு.க ஆதரவாளரான மடாதிபதி அருணகிரி இப்தார் நோன்பு விருந்தில் கலந்து கொண்டதோடு நின்றுவிடாமல், இஸ்லாமிய மதக் கோட்பாட்டின்படி வழங்கப்படும் கஞ்சியையும் அருந்தியுள்ளார். இச்செயலானது இந்து அமைப்புகளின் பலத்த கண்டணத்துக்கு இவரை உள்ளாகி இருக்கிறது.
ஒரு மடத்தின் ஆதினமாக இருக்கும் அவர், மற்றொரு மதம் தொடர்பான சடங்கில் பங்கேற்று இஸ்லாமிய முறைப்படி கஞ்சி அருந்திய செயல், இந்து மதக் கோட்பாடுகளுக்கு எதிரானது என இந்து மத அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இதன் உச்சக்கட்டமாக இந்து மக்கள் கட்சி மதுரை ஆதீனத்தை இந்து மதத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது.
மீண்டும் கஞ்சியாகிறது மதுரை ஆதீனம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 05, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 05, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)




No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.