Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 2, 2016

பேஸ்புக்கில் ஆபாச படம் வெளியிடுவேன்: பெண்ணை மிரட்டிய காளிதாஸ் கைது


காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் புகைப்படத்தை பேஸ்புக்கில் ஆபாசமாக வெளியிடுவேன் என்று மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் 23 வயது பெண். இவரது செல்போனுக்கு சில மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் சானார்பட்டியை சேர்ந்த காளிதாஸ் (25) மிஸ்டுகால் கொடுத்துள்ளார். இதன்பிறகு அந்த இளம்பெண்ணும் காளிதாசும் நட்பு ரீதியில் அடிக்கடி பேசியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த வாரம் காளிதாஸ் போனில் பேசும்போது, இளம்பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார். காதலை ஏற்க அவர் மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த காளிதாஸ், பேஸ்புக்கில் இளம்பெண்ணின் போட்டோவை தவறாக சித்தரித்து வெளியிடப் போவதாக மிரட்டியுள்ளார். இதனால் இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி காளிதாசை கைது செய்து விசாரித்தனர். பின்னர் அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.