Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 2, 2016

ஆரணி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து சகோதரர்கள் இருவர் பலி



திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே  சகோதரர்கள் 2 பேர் பள்ளிக்குச் செல்லும் வழியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆரணி அருகே, களம்பூர் காலணியை சேர்ந்த வேலு மற்றும் சங்கீதா தம்பதியரின் மகன்களான சந்தோஷ்(9) மற்றும் நிவேத்(7)  இன்று காலையில் பள்ளிக்கு செல்வதற்கு அரசு மருத்துவமனையின் பின்புறத்தில் இருக்கும் குறுக்கு பாதை வழியாக சென்றுள்ளனர் .அங்கு அறுந்து கிடந்த  மின் கம்பியைக் கவனிக்காமல் மிதித்ததில் இருவரும் தூக்கிவீசப்பட்டு உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.