Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 5, 2016

பெண்ணை பெற்றவர்களே சிந்திப்பீர்.



விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன்.
நடிகர் சிவகார்த்திகேயனும், பல
கல்லூரி கன்னிகளும் கலந்து கொண்ட
நிகழ்ச்சி அது...
அதில் ஒரு பெண் சிவகார்த்திகேயனுக்கு
வீட்டிலிருத்து பொங்கல்
கொண்டு வந்து ஊட்டி விட்டே ஆக வேண்டும்
என்று ஊட்டி விடுகிறார். இன்னொரு பெண்
நீங்கள் என்னை தொட்டு தூக்க வேண்டும் என
அடம் பிடிக்கிறார். நடிகர் அவர்
நாகரீகமா என்னை வீட்டுக்கு போக விடாமல்
ஆக்கிடுவீங்க போல என்று தன் தர்ம
சங்கடத்தை மறைமுகமாக கூறுகிறார்...
இயக்குனர் அழ சொன்னால் அழும், சிரிக்க
சொன்னால் சிரிக்கும், பல பெண்களோடு பல
பேர் மத்தியில் கட்டிப் புரளும் ஒரு நடிகன்
மீது இந்த பெண்களுக்கு ஏன் இத்தனை பெரிய
ஈர்ப்பு? தன்னை சுற்றி பல உறவுகள் அன்பாக
இருக்கும் தருவாயிலும் பணத்துக்காக நடிக்கும்
ஒரு நடிகன் மீது ஏன் தன்னை தொட்டு தூக்க
வைக்கும் அளவிற்கு அன்பு?
விளங்கவே இல்லை நவீன தமிழச்சிகளே...
பணம் செலவழித்து படம் பார்த்தால் அந்த
இரண்டரை மணி நேரம்
பொழுது போக்கு என்று உணருங்கள்
குழந்தைகளே. அதை கடந்து அந்த
நடிகனை மன்மதனாக பார்க்காதீர்கள் உங்கள்
மனாளனை மன்மதனாக பாருங்கள்.
சிந்தியுங்கள் பெண்களே!!!
இப்படி கேவலமாக நடந்து கொள்ளும்
பெண்களும், அதைக் கண்டிக்காத,
கண்டுகொள்ளாத பெண்கள் அமைப்புகளுக்கும்,
ஏதாவது தவறுநடநதால் மட்டும்
வரிந்து கட்டிக் கொண்டு, பெண்ணினத்தைக்
காக்க வந்த ரட்சகர்கள் போல்
பேசுவது பச்சை ஏமாற்றுவேலை.
பெண்கள் தவறாக
நடத்து கொள்ளும்போது அதைக் கண்டிக்காத,
அவர்களை சரியாக வழி நடத்த எந்த
முயற்சியும் எடுக்காத பெண்களுக்கும்,
பெண்கள் அமைப்புகளுக்கும், தவறுகள்
நடக்கும் போது குரலெழுப்ப எந்த தார்மீக
உரிமையும் இல்லை.
அப்போது மட்டும்
கொதித்து எழுபவர்கள், பாதிக்கப் பட்ட
பெண்ணை வைத்து பிரபலமாகத்
துடிப்பவர்களே.
பெண்கள் இப்படி அதுவும்,
ஒரு தொலைக்காட்சி நிகழ்சியில்
நடந்து கொள்ளும்போது பார்த்து,
பெருமையடையும், பூரித்துப் போகும்
அவர்களின் கேடுகெட்ட பெற்றோர்களை எந்த
வகையில் சேர்ப்பது ?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.