மகளை குடிபோதையில் கேலி செய்த கும்பலை தட்டிக்கேட்ட தந்தை அடித்துக் கொல்லப்பட்டுள்ள கொடூர சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.
கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐம்பது வயதான ரமேஷ் என்பவர் தனது மகளுடன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியில் குடித்துவிட்டு நின்று கொண்டிருந்த ஒரு கும்பல்,ரமேஷின் மகளை கிண்டல் செய்துள்ளது.இதனால் கோபமடைந்த ரமேஷ், தனது மகளை வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு,அந்த கும்பலை தட்டிக் கேட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த அந்த போதை கும்பல்,ரமேஷை கடுமையாக தாக்கியுள்ளது.ஏற்கனவே இதய நோயாளியான ரமேஷ்,அடி தாங்க முடியாமல் மயங்கி விழுந்துள்ளார்.அருகிலிருந்தவர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.ஆனால் அவர் வரும் வழியிலேயே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு,அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.ஆனால் இதுவரை யாரும் இந்த வழக்கில் கைது செய்யப்படவில்லை.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.