Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 12, 2016

தி.மலையில் பைக்கில் சென்றபடி 2 கைகளால் லேப்டாப்பை இயக்கி வாலிபர் சாகசம்


திருவண்ணாமலையில் வாலிபர் ஒருவர் பைக்கில் செல்லும் போதே 2 கைகளாலும் லேப்டாப்பை இயக்கி சாகசம் செய்து காட்டினார். திருவண்ணாமலை அடுத்த இலுப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(29). பிபிஏ. பட்டதாரி. ஊர்க்காவல் படையில் பகுதி நேரமாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று போக்குவரத்து அதிகமாக உள்ள, திருவண்ணாமலை புதிய பைபாஸ் சாலையில், பைக் சாகசத்தில் சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கில், பொதுமக்கள் முன்னிலையில், கைகளின் துணையின்றி பைக்கை இயக்கிக்கொண்டே, 2 கைகளால் லேப்டாப்பை இயக்கினார். அப்போது பைக்கை 50 கி.மீ. வேகத்தில் சுமார் 1 கி.மீ. தூரம் வரை கைகள் துணையின்றி பைக்கை ஓட்டிக்கொண்டு லேப்டாப்பை இயக்கி சாகசம் செய்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

பைக் சாகசத்தில் ஈடுபட்டு சாதனை படைப்பது எனது லட்சியம். இதற்காக நான் பிளஸ் 2 படிக்கும்போதே பைக் சாகச பயிற்சி மேற்கொண்டேன். கடந்த 2014ம் ஆண்டு இதே புறவழிச்சாலையில் கைகளின் துணையின்றி, சுமார் 50 கிலோமீட்டர் வேகத்தில் பைக்கில் படுத்தபடி, நின்றபடி, பைக்கை ஓட்டி பொதுமக்கள் முன்னிலையில் சாகசம் செய்தேன். ஆனால் அதை விட வேறு புதிய முறையில் சாகசம் செய்ய வேண்டும் என திட்டமிட்டேன்.  அப்போது தான் பைக்கில் சென்று கொண்டே 2 கைகளாலும் லேப்டாப்பை இயக்கிக்கொண்டு செல்லமுடிவு செய்தேன். அதற்காக கடந்த ஓராண்டாக பயிற்சி பெற்று வருகிறேன். இதற்கு முன்னோட்டமாக தற்போது பொதுமக்கள் முன்னிலையில் செய்து காண்பித்துள்ளேன். போக்குவரத்து இல்லாத சாலையில் அதிகபட்சம் 3 கிலோ மீட்டர் தூரம் வரை, கைகளின் துணையின்றி, லேப்டாப்பை இயக்கிக்கொண்டு செல்வேன். பைக்கை குறிப்பிட்ட வேக அளவில் நிலையாக வைத்துவிட்டு, பைக்கில் சென்று கொண்டே 2 கைகளாலும் லேப்டாப்பை இயக்கிச்செல்ல முடியும். பைக் ஓட்டுவதில் புதிய சாதனை படைக்க திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

பாதுகாப்பு, அனுமதியின்றி பைக் சாகசம் செய்த வாலிபர்

சாகசம் செய்யும் ஆர்வத்தில் வாலிபர் தனக்கு எத்தகைய பாதுகாப்பும் ஏற்படுத்தி கொள்ளாமல் பைக்கில் சாகசம் செய்தார். தலைக்கு ஹெல்மெட் கூட அணியாமல் கைகள் உதவியின்றி அதிவேகத்தில் ஆபத்தான முறையில் இந்த சாகச செயலில் ஈடுபட்டார். மேலும், சாகசம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எந்தவித அனுமதியும் பெறவில்லை. இந்த புறவழிச்சாலை எந்த நேரமும் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள பகுதி. இதில் அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்பட்டிருந்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.