Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 16, 2016

ஜாமீனுக்கு மல்லுக்கட்டும் ஆடி கார் ஐஸ்வர்யா


குடி போதையில் காரை ஓட்டிச்சென்று தொழிலாளி ஒருவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார் பிரபல தொழில் அதிபரின் மகள் ஐஸ்வர்யா. இவர் பிரபல விலை உயர்ந்த காரனா ஆடி காரை ஓட்டி சென்று இந்த விபத்தை ஏற்படுத்தியதால் ஆடி கார் ஐஸ்வர்யா என கூறப்படுகிறார்.

சென்னை, தரமணியில், மதுபோதையில் கார் ஓட்டி ஐஸ்வர்யா ஏற்படுத்திய இந்த விபத்தில் முனுசாமி என்ற தொழிலாளி ஒருவர் இறந்தார். இந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில் 2-வது முறையாக ஜாமீன் கோரி ஆடி கார் ஜஸ்வர்யா மனுதாக்கல் செய்துள்ளார்.

ஏற்கனவே இது தொடர்பாக, ஐஸ்வர்யா ஜாமீன் மனு ஒன்றை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் இன்று மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2-வது முறையாக ஜாமீன் கோரி ஆடி கார் ஐஸ்வர்யா மனுதாக்கல் செய்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.