Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 15, 2016

லார்ட்ஸ்...இங்கிலாந்து...6 ஆண்டுக்கு பிறகு மீண்டும் முகமது ஆமிர்!


ஆகஸ்ட் 2010, சல்மான் பட் தலைமையிலான பாகிஸ்தான் அணி இங்கிலாந்து மண்ணில் படுதோல்வி அடைந்து திரும்பியது. தொடர் நாயகன் முகமது ஆமிர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வேன்டுமென்றே நோபால் வீசியது தெரிய வந்து 5 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் திரும்ப களம்கண்ட ஆமீர் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சு கில்லியாகியுள்ளார்.

அணிக்கு திரும்பியதை நன்றாக பயன்படுத்தி கொண்டார். உலகின் அதி பயங்கர வீரர்களான கோலி, டிவில்லியர்ஸையே டி20 போட்டிகளில் நிலை குலைய வைத்தார். ஆசியக் கோப்பையில் இந்தியாவை அலறவிட்ட ஆமீருக்கு ஒரு பேட்டை பரிசளிப்பதாக கோலி கூறி உலகக் கோப்பையில் அதனை தந்ததும் ஆமீரின் என்ட்ரிக்கு மதிப்பை கூட்டின.




எந்த டெஸ்ட் போட்டியில் நோபால் புகாரால் வெளியேறினாரோ, அதே மைதானம், அதே எதிரணி மீண்டும் தன்னை நிருபிக்க களமிறங்குகிறார் ஆமிர். இந்த முறை நோபால் இல்லை...நியூ பால் என்ற வேகம் தான் ஆமிரின் ஆயுதம். லார்ட்ஸ் மைதானம் பல்வேறு சிறப்புகளை கொண்டது. ஆமீரின் ரிட்டர்னும் சரித்திர நிகழ்வாக வேண்டும் என பாகிஸ்தான் ரசிகர்கள் நினைக்கிறார்கள். கடைசியாக இதே ஆடுகளத்தில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய போட்டிதான் ஆமீரின் கடைசி போட்டி.
6 வருடங்கள் கழித்து திரும்ப வந்திருக்கிறார் ஆமீர். சசெக்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் 3/36 என ஸ்டெம்புகளை தெறிக்க விட்டார் ஆமிர். #LifeCircleAtLords என்று ஆமீரை சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.