தூங்கி கொண்டு இருந்த மகள் மீது ஆசிட் வீசிவிட்டு சென்றுள்ளான் தாயாரின் கள்ளக்காதலன்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள குப்பச்சி பாறை பகுதியை சேர்ந்தவர் நடராஜன். விவசாயி. இவரது மகள் புவனேஸ்வரி (19). இவர் பொள்ளாச்சியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி முடித்து விட்டு எம்.எஸ்.சி பட்டப்படிப்பில் சேர விண்ணப்பித்து இருந்தார். சம்பவத்தன்று இரவு இவரும், இவரது குடும்பத்தினரும் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று ஒரு மர்ம நபர் வீட்டிற்குள் திராவகத்தை வீசினார். இதில் மாணவி புவனேஸ்வரியின் வலது கண்புருவம் மற்றும் வலது கை ஆகிய இடங்களில் திராவகம் பட்டு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகில் உள்ள குருபரப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களுரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து வேப்பனப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் மாணவியின் முகத்தில் திராவகம் வீசியவர் அதே ஊரைச் சேர்ந்த லாரி டிரைவரான வேடியப்பன் (36), என்பது தெரிய வந்தது.
வேடியப்பனுக்கும் புவனேஸ்வரியின் தாயாருக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. மேலும் புவனேஸ்வரியை திருமணம் செய்து வைக்கும்படி தாயரிடம் கேட்டுள்ளான். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரம் அடைந்த வேடியப்பன் இரவு புவனேஸ்வரி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது திராவகம் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் அப்பகுதியில் எல்லோரிடமும் பேசி வந்தான். இந்நிலையில் காவல்துறையினர் விசாரணையில் மாட்டி கொண்டேன். இதையடுத்து காவல்துறையினர் அவனை கைது செய்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.