Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 8, 2016

ரயில் கட்டண சலுகை பெற ஆதார் எண் கட்டாயம்: முன் பதிவிற்கும் அமல்படுத்த திட்டம்


ரயில் டிக்கெட்டுகள் வாங்குவதற்கும், கட்டண சலுகை மற்றும் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதற்கும் ஆதார் எண்ணை கட்டாயமாக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் 100 கோடி பேருக்கும் மேல் ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கும் இணைக்கப்பட்டுள்ளதால் சமயல் எரிவாயு உள்ளிட்ட மாநில தொகை, வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண்ணை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதனிடையே ரயில்வேயில் பல்வேறு கட்டண சலுகைகளை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்படவுள்ளது. மூத்த குடிமக்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள் என 53 பிரிவினருக்கு ரயில்வே துறை கட்டணச் சலுகைகளை அளித்து வருகிறது. இது போன்ற கட்டண சலுகைகளை பெறுவதற்கும், ரயில் டிக்கெட் முன் பதிவு செய்வதற்கும் ஆதார் எண் அளிப்பது கட்டாயமாக்கப்படவுள்ளது. அரசின் ஒப்புதலுக்கு பிறகு மிக விரைவில் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்று ரயில்வே வட்டாரத்தில் கூறப்படுகிறது.



No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.