Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 11, 2016

குளுக்கோஸ் பிஸ்கட்டுக்கு அடிமையாகி கிடந்த கவாஸ்கர்: சுவாரஸ்ய தகவல்


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்த சுனில் கவாஸ்கர் தனக்கு மிகவும் பிடித்தமான குளுக்கோஸ் பிஸ்கட்டின் சுவைக்கு அடிமையாகி கிடந்த சம்பவத்தை அவரது தங்கை நினைவு கூர்ந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்த சுனில் கவாஸ்கர் நேற்று தனது 67-வது பிறந்தநாளை  கொண்டாடினார். மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் சங்கத்தில் நேற்று நடந்த கவாஸ்கரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பல வீரர்கள் கவாஸ்கரின் உழைப்பு மற்றும் திறமையை வெகுவாக புகழ்ந்தனர்.

அப்போது பேசிய கவாஸ்கரின் தங்கை நுதன், கவாஸ்கரின் தனிநபர் வாழ்க்கையைப்பற்றி லேசாக மனம் திறந்தார்.

தனக்கு மிகவும் பிடித்தமான ‘பார்லே-ஜி’ குளுக்கோஸ் பிஸ்கட்டின் சுவைக்கு கவாஸ்கர் அடிமைப்பட்டு கிடந்ததார். டீ அல்லது காபி அருந்தும்போது கட்டாயமாக அந்த பிஸ்கட் இருக்க வேண்டும் என விரும்புவார்.

வெஸ்ட் இண்டீஸ் போன்ற நாடுகளில் நடந்த கிரிக்கெட் போட்டிகளில் அவர் விளையாட சென்றிருந்த வேளைகளில் எல்லாம் அந்நாடுகளுக்கு செல்லும் பத்திரிகையாளர்கள் அல்லது குடும்ப நண்பர்கள் யாரையாவது பிடித்து, அவருக்கு பிடித்தமான ‘பார்லே-ஜி’ குளுக்கோஸ் பிஸ்கட் பாக்கெட்களை மும்பையில் இருந்து கொடுத்தனுப்புவோம் என்று நுதன் குறிபிட்டார்.

தற்போது சர்க்கரை நோய் உள்ளதால் மிகவும் இனிப்பான அந்த பிஸ்கட்களை சாப்பிடுவதை தவிர்க்க அவர் முயற்சித்து வருகிறார். ஆனாலும், ‘பார்லே-ஜி’ குளுக்கோஸ் பிஸ்கட் மீதுள்ள காதல் அண்ணனுக்கு குறையவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.