Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 2, 2016

தந்தையால் ஆற்றில் வீசப்பட்ட ஆறு வயது சிறுமி, 11 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு


ஷூ வாங்கித் தருவதாக 6 வயது சிறுமியை அழைத்துச் சென்று அவளது தந்தை நதியில் வீசியுள்ளார். எனினும் ஆகாயத் தாமரையில் சிக்கிய அந்த சிறுமி 11 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார்.

மகாராஷ்டிராவின் தானே மாவட்டம், பத்லாப்பூர், வாலிவிலி பகுதியில் உல்லாஸ் நதி மேம்பாலம் அமைந்துள்ளது. அந்த மேம்பாலத்தில் காலை நடந்து சென்றுகொண்டிருந்த ஆண் ஒருவர் நதியின் ஆகாயத்தாமரையில் ஒரு சிறுமி சிக்கி உயிருக்குப் போராடிபடி கதறிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அவர் சம்பவம் குறித்து போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் நதியில் இறங்கி சிறுமியை மீட்டனர். மிகவும் சோர்வாக இருந்த சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் பெண் போலீசார் நதியில் விழுந்தது குறித்து சிறுமியிடம் கேட்டனர்.

அப்போது சிறுமி “தானேயில் வர்த்தக் நகரில் எனது வீடு உள்ளது. புதன் கிழமை இரவு 8 மணிக்கு எனக்கு புதிய ஷூ வாங்கி தருவதாக எனது அப்பா கூறி, அவரும் அவரது நண்பரும் என்னை அழைத்து சென்றனர். பின்னர் மேம்பாலத்திற்கு வந்ததும் திடீரென அவர் என்னை தூக்கி நதியில் வீசி விட்டு சென்றுவிட்டார்.” என்று கூறியுள்ளார்.

இரவு முழுவதும் ஆகாயத்தாமரையை பிடித்துக்கொண்டு 25 அடி ஆழ நதியில் மூழ்கிவிடாமல் உயிர்தப்பிய சிறுமியை அனைவரும் ஆச்சரியமாக பார்த்துவருகிறார்கள்.

இந்நிலையில், சிறுமியின் தாய் புதன்கிழமை இரவு தனது மகளை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பத்லாப்பூர் போலீசார் சிறுமியின் தந்தையை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.