Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 5, 2016

சென்னை ஓட்டேரியில் கணவர் இறந்த தகவலை கேட்ட அதிர்ச்சியில் மனைவியும் பலி


கணவர் இறந்த தகவலை கேட்ட அதிர்ச்சியில் மனைவியும் மயங்கி விழுந்து பலியானார்.

கணவர் மரணம்
சென்னை ஓட்டேரி, குளக்கரை சாலையை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 64). இவரது மனைவி விஜயகுமாரி (60), மகன் ஹரிகிருஷ்ணன். கடந்த சில நாட்களாக வேலாயுதம் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை வேலாயுதம் இறந்தார். இதுபற்றி அவருடைய வீட்டில் இருந்த விஜயகுமாரி மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கணவர் இறந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த விஜயகுமாரி திடீரென்று மயங்கி விழுந்தார்.

மனைவியும் பலி
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஓட்டேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.