சயான் மருத்துவமனையில் பெண்ணுக்கு 2 தலை, 3 கைகளுடன் அதிசய ஆண் குழந்தை பிறந்தது.
கர்ப்பிணி பெண்
மும்பை சயானை சேர்ந்தவர் இம்ரான்கான். இவரது மனைவி சாயின்கான்(வயது26). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், 3–வதாக மீண்டும் சாயின்கான் கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சாயின்கானை சயானில் உள்ள மாநகராட்சி மருத்துவமனையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பிரசவத்திற்காக இம்ரான்கான் சேர்த்து இருந்தார்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் காலை சாயின்கானுக்கு பிரசவ வலி உண்டானது. மகப்பேறு டாக்டர்கள் அவருக்கு பிரசவம் பார்த்தனர். ஆனால் சாயின்கான் பிரசவிக்க முடியாமல் தவித்தார்.
அதிசய குழந்தை
இதனால் சுகப்பிரசவத்தில் சிரமம் உள்ளதை அறிந்த டாக்டர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து சாயின்கான் அறுவை சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த குழந்தையை வெளியே எடுத்தனர். அப்போது சாயின்கானுக்கு பிரசவம் பார்த்த டாக்டர்கள் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏனென்றால் அந்த குழந்தைக்கு ஒரே உடலில் 2 தலைகள் மற்றும் 3 கைகள் இருந்தன. வயிற்றில் 2 தொப்புள் கொடிகள் காணப்பட்டன. அந்த அதிசய குழந்தை ஆண் குழந்தை ஆகும்.
நலமாக உள்ளது
பிறந்ததும் அந்த குழந்தை தனது 2 வாயால் சாதாரண குழந்தைகளை போல் கை, கால்களை அசைத்து வீறிட்டு அழுதது. இதை பார்த்து டாக்டர்கள் வியப்படைந்தனர். தற்போது அந்த குழந்தை நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
தொடர்ந்து தாய், சேய் இருவரையும் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருவதாக சயான் மருத்துவமனை டீன் டாக்டர் சுலேமான் மெர்ச்சண்ட் கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.