Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 27, 2016

பலூனில் தனியாக பறந்து 11 நாட்களில் உலகை சுற்றி வந்து ரஷ்ய சாகச வீரர் சாதனை


65 வயதாகும் ரஷ்யாவை சேர்ந்த சாகச வீரர் பெடோர் கோனியுகோவ் பலூனில் தனியாக பறந்து உலகம் முழுவதும் இடைநிற்காமல் வேகமாக சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார்.

கடந்த 12-ம் தேதி ஆஸ்திரேலியாவின் நார்தம் விமான தளத்தில் இருந்து சாதனை பயணத்தை துவங்கியிருந்தார் பெடோர். இவரை பின்தொடர்வதற்காக 6 ஹெலிகாப்டர்கள் இந்த பயணத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. 184 அடி உயரமுள்ள ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூனில் பெடோர் உலகை சுற்றி வந்துள்ளார். இந்த பலூன் 1.8 டன் எடை கொண்டதாகும். 11 நாட்கள் 6 மணிநேர வெற்றிகரமான பயணத்திற்கு பின் மீண்டும் இந்த பலூன் ஆஸ்திரேலியாவின் கல்கூர்லி பகுதிக்கு அருகாமையில் தரையிறங்கியது.

இதற்கு முன்பாக, அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஸ்டீவ் போசட் இதே இடத்தில் இருந்து பலூனில் சுற்றுப்பயணத்தை துவங்கி 33 ஆயிரம் கிலோ மீட்டர்களை 13 நாட்கள் 8 மணிநேரத்தில் உலகை சுற்றிவந்ததே சாதனையாக இருந்தது. ஆனால், தற்போது 11 நாட்களுக்குள்ளாக உலகை சுற்றிவந்து அந்த சாதனையை முறியடித்திருக்கிறார் பெடோர் கோனியுகோவ்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.