Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 24, 2016

29 பேர் சென்ற விமானம் மாயம்: கடலூர், விழுப்புரம் மாவட்ட கடல் பகுதியில் ராணுவ விமானத்தின் பாகங்கள் மிதக்கிறதா? கடலோர காவல்படையினர் அதிநவீன ரோந்து படகில் சென்று தேடுகிறார்கள்


29 பேருடன் மாயமான ராணுவ விமானத்தின் பாகங்கள், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களின் கடல் பகுதியில் மிதக்கிறதா? என கடலோர காவல்படையினர் அதிநவீன ரோந்து படகில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

தேடும் பணி

தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து 29 பேருடன் நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு புறப்பட்டு சென்ற ராணுவ விமானம் மாயமாகிவிட்டது.

காணாமல் போன விமானத்தை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களின் கடல் பகுதியில் தேடும் பணியில் ஈடுபடுமாறு கடலோர காவல்படை கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்பேரில் கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர்கள் சேகர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவகுருநாதன், பிரபாகரன், ரமேஷ் மற்றும் ஊர்க்காவல் படையினர் கடலூர் துறைமுகத்தில் இருந்து அதிநவீன ரோந்து படகில் சென்று கடலில் ஏதாவது தடயங்கள் தெரிகிறதா? என தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கடல் பகுதியில் இருந்து கடலூர் மாவட்டம் கிள்ளை கடல் பகுதி வரை கடலோர காவல்படையினர் தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

விமானத்தின் பாகங்கள்

இது குறித்து கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் சேகர் நிருபர்களிடம் கூறுகையில், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 120 கிலோ மீட்டர் தூரம் கடல் பகுதி உள்ளது. கூடுதல் டி.ஜி.பி. உத்தரவின் பேரில் கடல் பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டோம். மாயமான விமானத்தின் பாகங்கள், விமானம் விழுந்ததற்கான அடையாளம், எரிபொருள் ஏதேனும் மிதக்கிறதா? என்று பார்த்தோம். ஆனால் அவ்வாறு எதுவும் தெரியவில்லை. தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் கடலில் விமான பொருட்களோ அல்லது வேறு ஏதேனும் பொருட்களோ மிதப்பது தெரிந்தால், உடனே 1093 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கும்படி மீனவர்களுக்கும், மீனவ கிராம தலைவர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.