பட்டேல் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராடியதால் கைதாகி கடந்த 9 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹர்திக் பட்டேல் இன்று சிறையில் இருந்து விடுதலையானார்.
குஜராத் மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என போராடிவந்த ஹர்திக் பட்டேலை கைது செய்த போலீசார் அவர்மீது பிரிவினைவாதம் மற்றும் பொதுக்கூட்டங்களில் வாளை உயர்த்திக் காட்டி பொதுமக்களிடையே வன்முறைக்கு வித்திட்டது ஆகிய குற்றச்சாட்டுகளின்கீழ் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கடந்த ஒன்பது மாதங்களாக சூரத் மாவட்ட சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.
தன்னை ஜாமினில் விடுதலை செய்யுமாறு அகமதாபாத் நகரில் உள்ள குஜராத் ஐகோர்ட்டில் ஹர்திக் பட்டேல் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவின்மீது கடந்த 8-ம் விசாரணை நடத்திய நீதிபதி அவரை ஜாமினில் விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.
இன்றிலிருந்து ஆறுமாத காலத்துக்கு குஜராத் மாநிலத்துக்குள் அவர் நுழையக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஹர்திக் பட்டேலை விடுதலை செய்வதாக தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், ஹர்திக் பட்டேல் மீது தொடரப்பட்ட வேறு சில வழக்குகளில் அவருக்கு ஜாமின் கிடைக்காததால் அவர் சிறையில் இருந்து வெளியே வருவதில் சிக்கல் நீடித்தது. அவ்வழக்குகளிலும் இன்று அவருக்கு ஜாமின் கிடைத்தது.
இதையடுத்து, சூரத் நகரில் உள்ள லஜ்பூர் சிறையில் 9 மாதங்களாக அடைபட்டு கிடந்த ஹர்திக் பட்டேல், இன்று காலை சுமார் 11 மணியளவில் விடுதலையானார். சிறை வாசலில் காத்திருந்த அவரது ஆதரவாளர்கள் உற்சாக முழக்கத்துடன் மாலை மற்றும் துண்டுகளை அணிவித்து அவரை வரவேற்று, அழைத்துச் சென்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.