பாந்திராவில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 1,000 வீடு, கடைகள் இடித்து தள்ளப்பட்டன. இந்த நடவடிக்கையை மும்பை மாநகராட்சி மேற்கொண்டது.
ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு
மும்பை பாந்திரா கிழக்கு ரெயில் நிலையத்தையொட்டி ரெயில்வே மற்றும் மும்பை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து ஏராளமான குடிசை வீடுகள் மற்றும் கடைகள் இருந்தன. இந்த வீடுகளில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வந்தனர். இந்த ஆக்கிரமிப்பு குடிசை வீடுகளை இடித்து தள்ள மாநகராட்சி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.
இதன்படி நேற்று அங்குள்ள சுமார் 1,000 வீடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடித்து தரைமட்டமாக்கினர். வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
முன்னதாக இந்த வீடுகளில் இருந்த குடியிருப்புவாசிகள் மற்றும் கடைக்காரர்கள் அனைவரும் போலீசாரால் வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
போராட்டம்
பெரும்பாலானர்கள் தங்கள் உடைமைகளை எடுத்து கொண்டு வெளியேறினார்கள். இந்தநிலையில், தங்கள் வீடுகள் மற்றும் கடைகள் இடிக்கப்பட்டதை கண்டித்து அங்கு வசித்த பொதுமக்கள் திடீரென பாந்திரா கிழக்கு ரெயில் நிலையம் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை எச்சரித்ததை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இருப்பினும் மழை நேரத்தில் வீடுகள் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்கள் குழந்தை, குட்டிகளுடன் எங்கு சென்று தஞ்சம் அடைவது என்பது தெரியாமல் உடைமைகளுடன் தவித்தபடி நின்று கொண்டிருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.