Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 21, 2016

வினோத நோய் பாதிப்பு: சிறிய பிளாஸ்டிக் டப்பில் வாழ்க்கை நடத்தும் இளம்பெண்


நைஜீரிய நாட்டை சேர்ந்த 19 வயது பெண் பிளாஸ்டிக் கிண்ணத்தில் வாழ்க்கை நடத்தி வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவின் லஹதின் மகோலே என்ற கிராமத்தில் வசித்து வரும் ரஹ்மா கருணா என்பவர் 6 மாத குழந்தையாக இருக்கும்போது, அவரது கைகள் மற்றும் கால்கள் வளர்ச்சியடைவது பாதிக்கப்பட்டது.

தற்போது, 19 வயதாகிவிட்ட ரஹ்மாவால் தனியாக எங்கும் செல்ல இயலாது, இதனால் தனது மகள் வீட்டுக்குள் முடங்கி கிடக்க கூடாது என எண்ணிய் தாய், பிளாஸ்டிக் கிண்ணத்தில் தனது மகளை வைத்து, அவள் செல்ல விரும்பும் இடத்திற்கு அழைத்து செல்கிறார்.

இதுகுறித்து ரஹ்மா- வின் தாயார் கூறியதாவது, ரஹ்மாவுக்கு 6 வயது இருக்கையில் அவளுக்கு திடீரென காய்ச்சல் வந்தது, அதன் பின்னர் அவளது உடல் உறுப்பு பாகங்கள் வளர்ச்சியடைவில்லை, போதிய பண வசதி இல்லாத காரணத்தால் மேற்கொண்டு சிகிச்சை செய்யமுடியவில்லை என்று கூறியுள்ளார்.

ரஹ்மா- வின் இளைய சகோதரன் பகத் கூறியதாவது, நான் எப்போதும் எனது சகோதரிக்கு உதவிசெய்வேன், அவரை பிளாஸ்டிக் கிண்ணத்தில் வைத்து உறவினர்களின் வீட்டிற்கும், வெளியிலும் அழைத்து செல்வது என பல்வேறு வழிகளில் அவருக்கு உதவி செய்வேன் என கூறியுள்ளான்.

உறவினர்களை பார்த்து பேசி மகிழ்வதில் சந்தோஷம் கொள்ளும் நான், மளிகை கடை வைத்து எனது வாழ்க்கையை தொடர வேண்டும் என்பது எனது ஆசை என  ரஹ்மா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.