Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 11, 2016

நாடு விட்டு எல்லை தாண்ட சூட்கேசுக்குள் தன்னை தானே அடைத்துக்கொண்ட வாலிபர்


ஒரு நாட்டில் இருந்து மற்றொரு வெளிநாட்டுக்கு செல்ல ‘விசா’, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் தேவை. அவை எதுவும் இன்றி திருட்டு தனமாக எல்லை தாண்ட ஐரோப்பிய நாடுகளில் பலவிதமான சாகச வேலைகள் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் இத்தாலியில் இருந்து சுவிட்சர்லாந்து செல்ல 21 வயது வாலிபர் ஒருவர் முடிவு செய்தார். அவரிடம் விசா எதுவும் இல்லை. எனவே ஒரு பெரிய சூட்கேசுக்குள் தன்னை தானே அடைத்துக்கொண்டார்.

பின்னர் மற்றொருவர் உதவியுடன் சுவிட்சர்லாந்து செல்லும் ரெயிலில் அந்த சூட்கேசை ஏற்ற செய்தார். ரெயில் சுவிட்சர்லாந்து எல்லையை வந்தடைந்தது. எனவே அந்த சூட்கேஸ் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் இறக்கி வைக்கப்பட்டது.


வெளியே வர நைசாக சூட்கேஸ் ஜிப்பை திறந்தார். அப்போது சூட்கேஸ் தானாக ஆடியது அதைப்பார்த்த போலீஸ்காரர் என்ன என்று விசாரித்தார். இதற்கிடையே ஜிப்பை திறந்து வாலிபர் பாதி வெளியேறி விட்டார்.

உடனே அவரை ‘லபக்’ கென கையும் களவுமாக பிடித்து விட்டார். அவரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார். இச்சம்பவம் சுவிட்சர்லாந்து ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.