எண்களை சரியாக செல்லத்தெரியாததால் 6 வயது சிறுமியின் வாயில் வெங்காயத்தை திணித்து கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.
சிறுமி கொலை
அவுரங்காபாத் மாவட்டம் பாலாபூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ குடே. இவருக்கு 6 வயதில் பார்தி என்ற மகள் இருந்தாள். கடந்த 9–ந் தேதி ராஜூ குடே தன் மகளுக்கு வீட்டில் கணக்குப்பாடம் சொல்லிக்கொடுத்தார். அப்போது, சிறுமி பார்தியிடம் அவர் ஒன்று, இரண்டு, மூன்று என எண்களை வரிசையாக கூறும்படி சொன்னார்.
மழலை மொழி மாறாத 6 வயது சிறுமியால் 12 எண்களுக்கு மேல் சொல்லமுடியவில்லை. ராஜூ குடே பலமுறை சொல்லிக்கொடுத்தும் சிறுமி எண்களை முழுமையாக செல்ல தடுமாறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜூ குடே அருகில் இருந்த வெங்காயத்தை எடுத்து குழந்தையென்றும் பாராமல் பார்தியின் வாயில் திணித்தார். அந்த வெங்காயம் சிறுமியின் தொண்டையில் சிக்கிக்கொண்டதால் மூச்சுவிட திணறிய பார்தி சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்துபோனது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜூ குடே செய்தவறியாது திகைத்தார்.
மனைவி புகார்
பின்னர் கொலை பழியில் இருந்து தப்பிக்கும் நோக்கத்தில் குழந்தையின் உடலை இரவோடு, இரவாக வீட்டில் இருந்து எடுத்துச்சென்று அருகில் உள்ள மயானத்தின் அருகில் புதைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
இந்த நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்த ராஜூ குடேவின் மனைவி இதுகுறித்து அருகில் உள்ள போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் ராஜூ குடேவை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் போலீசில் அவர் போலீசாரிடம் சிக்கினார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்ற மகள் என்றும் பாராமல் குழந்தையை தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.