சென்னையை அடுத்த துரைப்பாக்கம் அருகே உள்ள காரப்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்தவர் நாகம்மாள்( வயது 80). நாகம்மாளுக்கு கண்பார்வை சரியாக தெரியாது என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் நாகம்மாள் வீட்டிற்கு இளம்பெண் ஒருவர் வந்து உள்ளார். ஏதாவது வேலை கிடைக்குமா என கேட்டு வந்த அந்த இளம்பெண் நாகம்மாள் வீட்டில் சிறிது நேரம் இருந்து விட்டு பின்னர் அங்கிருந்து சென்று விட்டார்.
அதன்பின்னர் நாகம்மாள் வீட்டில் குழந்தை அழும் சத்தம் கேட்டு உள்ளது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது நாகம்மாள் வீட்டிற்கு வந்த இளம்பெண் அங்கே தொட்டில் கட்டி ஆண் குழந்தையை போட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டது தெரியவந்தது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் கண்ணகி நகர் போலீசார் விரைந்து சென்று ஆண் குழந்தையை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். குழந்தையை போட்டுவிட்டு சென்ற இளம்பெண் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.