Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 22, 2016

அமெரிக்காவில் வீட்டு வேலைக்கு சென்ற வயதான பெண்ணை அடிமையாக நடத்திய பெண் கைது


அமெரிக்காவில் வீட்டு வேலைக்கு சென்ற வயதான பெண்ணை அடிமையாக நடத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

சீனாவை சேர்ந்தவர் லி லி ஹூவாங், இவர் தற்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வீட்டு வேலைகளை செய்வதற்காக சீனாவை சேர்ந்த ஒரு வயதான பெண்ணை மாதம் 890 என்ற டாலர் பேசி வீட்டு வேலைக்கு அமர்த்தி உள்ளார். வீட்டில் சமையல் வேலை செய்வது. குழந்தைகளை பார்த்துக்கொள்வது மற்றும் வீட்டை சுத்தப்படுத்துவது போன்றவற்றை அந்த வயதனா பெண்மணி கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் வயதான பெண்மனிக்கு ஹூவாங் சம்பளம் சரியாக கொடுக்கவில்லை. அதனை கேட்கும் போது வயதான பெண் என்று கூட பார்க்காமல் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

வீட்டை விட்டு வெளியேறிய அந்த பெண் சாலையில் படுகாயத்துடன் மயங்கி விழுந்துள்ளார். ரோந்து பணியில் ஈடுபட்ட அமெரிக்க போலீசார் அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அவருக்கு ஆங்கிலம் பேச தெரியாததால் மொழி பெயர்ப்பாளர் மூலம் போலீசாரிடம் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து வயதான பெண்ணை தாக்கிய குற்றச்சாட்டுக்காக லி லி ஹூவாங் மீது 5 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.