Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 5, 2016

சென்னை தண்டையார்பேட்டையில் சிறுமியை கற்பழித்து கர்ப்பிணி ஆக்கிய உறவினர் கைது


சென்னை தண்டையார்பேட்டையில் 16 வயது சிறுமியை கற்பழித்து கர்ப்பிணியாக்கிய உறவினரை போலீசார் கைது செய்தனர். சிறுமிக்கு குழந்தை பிறந்ததால் இந்த தகவல் வெளியில் தெரிந்து அவர் போலீசில் சிக்கினார்.

உறவினர் மகள்
சென்னை தண்டையார்பேட்டை, திலகர் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 54). இவருடைய மனைவி சந்திரா. இவர்களுக்கு குழந்தை இல்லை. அதே பகுதியில் வசித்து வரும் இவர்களுடைய உறவினர் ஒருவரின் வீடு இடித்து கட்டப்படுகிறது.

அதனால் அவர்கள் தங்களுடைய 16 வயது மகளை மணியின் வீட்டில் தங்கவைத்தனர். அந்த சிறுமி 10–ம் வகுப்பு வரை படித்து உள்ளார்.

பெண் குழந்தை
இந்நிலையில் அந்த சிறுமி நிறைமாத கர்ப்பிணியாக ராயபுரத்தில் உள்ள அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால் டாக்டர்கள் குழந்தையின் தந்தை குறித்து விசாரித்தனர்.

அப்போது தான் அந்த சிறுமிக்கு திருமணம் ஆகவில்லை என்பதும், உறவினரால் கற்பழிக்கப்பட்டு கர்ப்பமாகி குழந்தை பெற்றதும் தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

கைது
போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது உறவினர் மணி வீட்டில் தங்கியிருந்தபோது தன்னை மணி கற்பழித்ததால் கருத்தரித்து குழந்தை பிறந்ததை அந்த சிறுமி போலீசாரிடம் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், சிறுமியை கற்பழித்த மணியை கைது செய்தனர்.

போலீசார் அவரை ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.