July 18, 2016
மீன்வளத்துறை அலுவலகத்தில் காவலரை அதிகாரியே 3 நாட்களாக பூட்டி வைத்து சித்ரவதை!
பொன்னேரி மீன்வளத்துறை அலுவலகத்தில் காவலரை அதிகாரியே 3 நாட்களாக பூட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் கஜேந்திரன் என்பவர் காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்கள் முன்பு பணிக்கு மதுபோதையில் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அதிகாரி சுப்பிரமணி கடந்த 15ம் தேதி அன்று அலுவலகத்தில் பூட்டி சிறைவைத்துள்ளார். மூன்று நாட்களாக உணவின்றி பூட்டி வைத்ததால் கஜேந்திரன் மிகவும் பாதிக்கப்பட்டார். அறையில் இருந்த கஜேந்திரன் கூக்குரல் எழுப்பியதை தொடர்ந்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். கஜேந்திரனை மீட்ட காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீன்வளத்துறை அலுவலகத்தில் காவலரை அதிகாரியே 3 நாட்களாக பூட்டி வைத்து சித்ரவதை!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 18, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 18, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.