Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 8, 2016

இந்த ஆண்டில் கூடுதலாக ஒரு விநாடி!


இந்த ஆண்டில் கூடுதலாக ஒரு விநாடியை சேர்க்க சர்வதேச நேரத்தைக் கணக்கிட்டு வரும் அமெரிக்கக் கடற்படை வானாய்வு அமைப்பு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

பூமியின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு நேரம் கணக்கிடப்படுகிறது. எனினும், அதிநவீன "அணுவியல் கடிகாரங்கள்' கண்டிபிடிக்கப்பட்ட பிறகு, பூமியின் சுழற்சியை சாராமலேயே நேரம் மிகத் துல்லியமாக கணக்கிடப்பட்டு வருகிறது.

ஆனால் அணுவியல் கடிகாரத்தின் நேரத்தைவிட பூமி தினமும் 1.5 முதல் 2 மில்லி விநாடிகள் மெதுவாகச் சுழல்கிறது.

இதன் காரணமாக, 500 முதல் 750 நாள் கால அளவில் பூமி சுழற்சியின் அடிப்படையிலான நேரத்துக்கும், துல்லியமான அணுவியல் கடிகார நேரத்துக்கும் சுமார் ஒரு விநாடி வேறுபாடு காணப்படுகிறது.

இந்த வேறுபாட்டை அவ்வப்போது சரி செய்துகொள்வதற்கான சர்வதேச ஒப்பந்தம் கடந்த 1970-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, சர்வதேச நேரத்தைக் கணக்கிட்டு பராமரித்து வரும் அமெரிக்கக் கடற்படை வானாய்வு அமைப்பு, இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி நள்ளிரவு 11 மணி 59 நிமிடம், 59-ஆவது விநாடிக்குப் பிறகு கூடுதலாக ஒரு விநாடியை சேர்க்க முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக 11.59.59 மணிக்கு அடுத்த விநாடியும் 11.59.59 மணியாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.