Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 6, 2016

ஒன்றரை வயதில் 22 கிலோ: வினோத நோயால் உயிருக்குப் போராடும் குழந்தை


மராட்டிய மாநிலத்தில் மிகவும் அரியநோயால் ஒன்றரை வயது குழந்தை 22 கிலோ எடை அளவுக்கு வளர்ச்சியடைந்துவரும் ஆபத்தான தகவல் வெளியாகியுள்ளது.

மராட்டிய மாநிலம், புனே மாவட்டம், போசாரி பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியரின் ஒன்றரை வயது ஆண் குழந்தை ‘லெப்டின்’ எனப்படும் ஹார்மோன் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, நாளுக்குநாள் அதீதமான உடல் எடையுடன் வளர்ந்து வருகிறது.

இந்த பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு வயிற்றுக்கு வேண்டிய அளவுக்கு சாப்பிட்டால் போதும் என்ற மனநிறைவு ஏற்படாது. அதற்கு மூளையில் இருக்கும் பகுதி இடமளிக்காது. மேலும், மேலும் பசிப்பது போன்ற உணர்வே தொடர்ந்து ஏற்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்ரீஜித் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை பிறக்கும்போது இரண்டரை கிலோ எடை மட்டுமே இருந்தது.

பின்னர், ஆறு மாதத்தில் 4 கிலோவாகவும், பத்து மாதத்தில் 17 கிலோவாகவும், தற்போது பதினெட்டு மாதத்தில் 22 கிலோவாகவும் அபரிமிதமான உடல் எடையுடன் இந்த குழந்தை வளர்ந்து வருகிறது. இதேநிலை நீடித்தால் மூன்று வயதுக்குள் சுமார் 40 கிலோ எடையை இந்த குழந்தை அடைந்துவிடும்.

எனவே, ஸ்ரீஜித்துக்கு மும்பையில் உள்ள ஜச்லோக் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நோயை குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகளும், மருந்துகளும் இந்தியாவில் இல்லை என்பதால் இங்கிலாந்தில் இருந்து மிகுந்த பணச்செலவின் மூலம் வரவழைக்கப்படும் விலையுயர்ந்த ஊசி மருந்தை ஒருநாளைக்கு இருவேளை செலுத்துவதன் மூலம் அந்த குழந்தையின் பசி நோயை டாக்டர்கள் ஓரளவுக்கு கட்டுப்படுத்தி வருகின்றனர்.

சாப்பிட ஏதாவது தராவிட்டால் தொடர்ந்து அழுது, அடம்பிடித்து, வயிற்றை நிரப்பிக் கொள்ளும் ஸ்ரீஜித் மூச்சுத்திணறலால் அடிக்கடி சிரமப்படுவதாகவும், சுயமாக உட்காரவோ, எழுந்து நிற்கவோ சிரமப்படுவதாகவும் குழந்தையின் தாயார் ருபாலி கூறுகிறார்.

இதற்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் தற்போது ரத்தக் கொதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள இந்த குழந்தைக்கு பல்வேறு நோய்களுக்கான பக்கவிளைவுகளும் தோன்றி, உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிடும் என கருதப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.