Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 25, 2016

அமெரிக்க ராணுவத்தில் பயன்படுத்துவதை போல குண்டு துளைக்காத ஹெல்மெட்; 10 லட்சம் துணை ராணுவப்படை வீரர்களுக்கு வழங்க மத்திய அரசு ஒப்புதல்


புதுடெல்லி,

வழக்கமாக, நம் ராணுவ வீரர்களுக்கு 1.5 கிலோ முதல் 2 கிலோ எடை வரையுள்ள 'பத்கா' வகை தலைக் கவசங்களே வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், அண்மையில் ஜம்மு-காஷ்மீரில் நடந்த வன்முறையில் போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியபோது பல ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். இதுபோன்ற தாக்குதல்களை தாங்கும் அளவுக்கு தற்போதுள்ள தலைக்கவசங்கள் இல்லை. சத்தீஸ்கரில் உள்ள அடர்ந்த காடுகளில் மாவோயிஸ்டுகளின் துப்பாக்கி குண்டுகளுக்கு மத்தியில் தீவிரமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நம் துணை ராணுவ வீரர்களுக்கு இந்த தலைக்கவசம் போதிய அளவிற்கு பாதுகாப்பு கவசமாக இல்லை என்பதே நிதர்சனம்.

இந்நிலையில், துப்பாக்கி குண்டுகள் துளைக்காத, குறைந்த எடை கொண்ட பாதுகாப்பு மிக்க தலைக்கவசங்களை துணை ராணுவப்படை வீரர்ககளுக்கு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வகை தலைக்கவசங்கள் அமெரிக்க ராணுவத்தில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த தலைக்கவசங்கள் 20 மீட்டர் தொலைவில் இருந்து பாய்ந்து வரும் 7.62 mm மற்றும் 9 mm துப்பாக்கி குண்டுகளைக் கூட தாங்கும் சக்தி கொண்டது. அதுமட்டுமின்றி, கற்களால் தாக்கப்படும் போது கழுத்தில் காயம் ஏற்படாமல் தடுக்கவும் இந்த தலைக்கவசங்கள் பாதுகாப்பானவை.

வாக்கி-டாக்கி, நைட் விஷன் கேமிரா, டார்ச் லைட் போன்ற இதர கருவிகளையும் இந்த தலைக்கவசத்தில் பொருத்த முடியும். இந்த தலைக்கவசத்தை வாங்குவதற்கான ஒப்புதலை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வழங்கியுள்ளார். முதல்முறையாக இதுபோன்ற தலைகவசங்கள் 10 லட்சம் துணை ராணுவப்படை வீரர்களுக்கும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.