ஒவ்வொருவருக்கும் வெண்மையான பற்கள் வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக பல முயற்சிகளையும் மேற்கொண்டிருப்போம். ஏன் பல் மருத்துவரை சந்தித்து, பற்களை ப்ளீச்சிங் கூட சிலர் செய்வார்கள். ஆனால் இப்படி ப்ளீச்சிங் செய்தால், பற்களின் எனாமல் குறைந்துவிடும்.
ஆகவே பற்களின் எனாமல் பாதிக்கப்படாமல், பற்களில் படிந்திருக்கும் கனிம படிகங்களை நீக்க வேண்டுமானால், ஒரே ஒரு செயலை மட்டும் செய்தால் போதுமானது. பற்களில் படியும் மஞ்சள் நிற படிகங்களை நீக்காமல் மருந்தால், ஈறுகள் மற்றும் பற்களின் ஆரோக்கியம் தான் முதலில் பாதிக்கப்படும்.
இங்கு மருத்துவரிடம் செல்லாமல் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்க ஓர் அற்புதமான மௌத் வாஷ் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்து நன்மைப் பெறுங்கள்.
தேவையான பொருட்கள்
பேக்கிங் சோடா
ஹைட்ரஜன் பெராக்ஸைடு
உப்பு
தண்ணீர்
ஆன்டி-செப்டிக் மௌத் வாஷ்
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன், 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் ஈரமான டூத் பிரஷ் கொண்டு, அக்கலவையை தொட்டு பற்களைத் தேய்த்து, துப்ப வேண்டும். இந்த முறையை 5 நிமிடம் தொடர்ந்து செய்ய வேண்டும்.
பின் ஒரு கப் ஹைட்ரஜன் பெராக்ஸைடுடன் 1/2 கப் வெதுவெதுப்பான நீர் சேர்த்து கலந்து, ஒரு நிமிடம் அதைக் கொண்டு வாயைக் கொப்பளித்து துப்பவும். பின்பு குளிர்ந்த நீரில் மீண்டும் வாயைக் கொப்பளிக்கவும்.
அடுத்து ஒரு டூத் பிக் கொண்டு, பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை தேய்த்துவிட வேண்டும். குறிப்பாக இச்செயலை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சிறிது தவறினாலும், ஈறுகளில் பாதிப்பு ஏற்படும்.
இறுதியில் ஆன்டி-செப்டிக் மௌத்வாஷ் கொண்டு வாயைக் கொப்பளித்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், பற்களில் மஞ்சள் கறைகள் படிவதை முற்றிலும் தடுக்கலாம்.
ஸ்ட்ராபெர்ரி பழங்களில் உள்ள வைட்டமின் சி பற்களில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எனவே ஸ்ட்ராபெர்ரி பழம் கிடைக்கும் போது, அதைக் கொண்டு பற்களைத் தேய்த்து, 5 நிமிடம் ஊற வைத்து, பின் பிரஷ் கொண்டு தேய்த்து நீரில் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இதனால் மஞ்சள் காறைகள் இளகி எளிதில் வெளிவரும்.
தக்காளி
அதேப் போல் தக்காளி துண்டை பற்களில் தேய்த்து, 5 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து குளிர்ந்த நீரில் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.