Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 28, 2016

விடுதலைப்புலிகளுடன் இதற்காகத்தான் போர்! -விளக்கும் ராஜபக்சே


தமிழர்களுடன் நல்லிணக்கம் ஏற்படுவதற்காகவே, விடுதலைப்புலிகளுடன் போர் நிகழ்த்தப்பட்டது என்று இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்து உள்ளார்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் சுமார் நாற்பதாண்டு காலமாக நடைபெற்ற உள்நாட்டுப் போர், கடந்த 2009-ல் முடிவுக்கு வந்தது. இறுதிப் போரின்போது சுமார் 40 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் பரிதாபமாக உயிரிழந்ததாக மனித உரிமை அமைப்புகள் கூறி வருகின்றன.

இலங்கையில் கடந்த 2015-ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வியடைந்தார். அவரது அமைச்சரவையில் இடம் பெற்ற மைத்ரிபாலா சிறீசேனா எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அதிபராக உள்ளார். அதிபராக சிறீசேனா பதவி ஏற்றது முதல், முன்னாள் அதிபர் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக எழுந்த பல்வேறு புகார்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இலங்கையில் பொதுக்கூட்டம் ஒன்றில் நேற்று கலந்துகொண்டு ராஜபக்சே பேசும்போது, ''எனது ஆட்சிக் காலத்தில் விடுதலைப்புலிகளுடன் போரிட்டு இலங்கை ராணுவம் வெற்றி பெற்றது. தமிழருடன் நல்லிணக்கம் ஏற்படுவதற்காகத்தான் விடுதலைப்புலிகளுடன் போர் நடைபெற்றது. எனது தலைமையிலான அரசின் மகத்தான வெற்றியை நாட்டு மக்களின் மனதிலிருந்து அழிக்கப் பார்க்கிறது தற்போதைய மைத்ரிபாலா சிறீசேனா அரசு.

சண்டை நடைபெற்ற, பதற்றம் நிறைந்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்புவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வந்தேன். இலங்கையில் நேர்மையான தேர்தலை நடத்தினேன். ஆனால் இப்போதைய அரசு, அரசியல் பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு காலத்தை வீணடிக்கிறது. என்னைப் பழி வாங்கும் நோக்கத்துடன் தற்போதைய அரசு செயல்படுகிறது. தங்களுடைய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை விட்டுவிட்டு, கற்பனையான விவகாரங்கள் குறித்து அரசு விசாரணை நடத்தி வருகிறது" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.