கோவை அருகே 3 கன்டெய்னர்களில் கைப்பற்றப்பட்ட ரூ.570 கோடி ரூபாய் விவகாரத்தில் முதன்முறையாக அதிமுக தரப்பில் அக்கட்சியில் சமீபத்தில் இணைந்த எஸ்.ஆர்.பி விளக்கம் அளித்துள்ளார்.
திருப்பூரில் 3 கன்டெய்னர்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.570 கோடி பிடிபட்ட சம்பவத்தில் திமுக தலைவர் கருணாநிதி, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் சிபிஐ விசாரணை கோரி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். கன்டெய்னரில் கொண்டு செல்லப்பட்ட இந்த ரூ.570 கோடி பணம் அதிமுக தலைமைக்கு உரிய பணம் என்பது போன்ற தகவல்கள் தொடர்ச்சியாக வலம் வருகின்றன.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அதிமுக தரப்பில் எந்த விளக்கமும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் அதிமுகவில் அண்மையில் இணைந்து, மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் கன்டெய்னர் பணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். "ஸ்டேட் வங்கியில் இருந்து யாரோ பணத்தை இன்னொருவருக்கு அனுப்ப மாட்டார்கள். வைத்தவர்கள் தான் எடுத்து செல்வார்கள். கன்டெய்னர் லாரி ஆந்திரா மாநில பதிவு எண் கொண்டதாக உள்ளது. ஸ்டேட் வங்கி கூற்றுப்படி அந்த பணம் கோவையில் இருந்து விசாகப்பட்டிணம் செல்கிறது.
போலீஸ் தேவையில்லாமல் தலையிட்டு பிடிச்சு வச்சதன் விளைவு தான் இது. அதிகாரிகள் சிலர் அத்துமீறி ஆர்வம் காட்டி எடுக்கப்பட்ட தவறான நடவடிக்கை தான் இது. இன்னொருவருக்காக அனுப்பிய பணத்தை, நாங்கள் அனுப்பிய பணம் என ஸ்டேட் வங்கி ஒப்புக்கொள்ளாது. பணம் ஆந்திராவுக்கு போகுது. ஆந்திராவுக்கு போற பணத்துல இவங்களுக்கு என்ன சந்தேகம். தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு பகுதிக்கு பணம் சென்றிருந்தால் கூட சந்தேகம் வரலாம். மீண்டும் மீண்டும் ஒரே குற்றச்சாட்டை சொல்வதால் அது உண்மையாகி விடாது.
இதில் மத்திய அமைச்சருக்கு தொடர்பு என்கிறார்கள். எப்படி என சொல்லட்டும். சிபிஐ விசாரணை நடத்தட்டும் வேண்டாம் என சொல்லவில்லை. எதற்கெடுத்தாலும் சிபிஐ விசாரணை என்பது சரியல்ல. சிபிஐயில் மனித சக்தி மிக குறைவு. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பது இயலாத காரியம். அதை புரிந்து கொள்ள வேண்டும்," என்றார் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்.
தொடர்ந்து பேசிய எஸ்.ஆர்.பி, 'தேர்தல் முடிவு வெளியான 19ம் தேதி காலையில் 10 மணிக்கே பிரதமர் மோடி தொலைபேசியில் தமிழக முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தார். அதற்கு பிறகு தான் தேர்தல் கமிஷன் ஜெயலலிதாவை ஜெயிக்க வைக்க முயற்சிகள் மேற்கொண்டது' என கலைஞர் சொல்லியிருக்கிறார். அதிமுகவுக்கு அதிக இடங்கள் கிடைத்த பின்னர், காலை 11.30 மணிக்குதான் பிரதமர் மோடி போனில் வாழ்த்தினார்.
அதேபோல், 'கசாப்புக் கடைக்காரரை நம்பி ஆடு கழுத்தை நீட்டுவது போல அதிமுகவுக்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்' என்று கலைஞர் சொல்கிறார். தமிழக மக்கள் புத்திசாலிகள் இல்லை என அவர் சொல்கிறார். தினமும் சாபம் கொடுக்கிறார். அவர் என்ன சொன்னாலும் மக்கள் அளித்த தீர்ப்பு, தீர்ப்பு தான். அதை யாராலும் மாற்ற முடியாது.
கலைஞர் போன்ற மூத்த தலைவர் மக்களை தொடர்ந்து குழப்புவது பெரும் வேதனை அளிக்கும் விஷயம். அவரும் யதார்த்தமான உண்மைகளை புரிந்து கொள்ள வேண்டும். எது நடைமுறை சாத்தியம் என்பது அவருக்கு தெரியாதது அல்ல. அதை உணர்ந்து அவர் நடந்து கொள்ள வேண்டும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.