போலீசாரின் சோதனையில் தொழிலதிபர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த மேலும் 100 சாமி சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும் சோழர் கால சிலைகள் என போலீசார் தெரிவித்துள்ளனர். சோதனையில் ஓவியங்களும், வெண்கல பாத்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பெரும்புதூர் அருகே உள்ள மணிகண்டேஸ்வரர் கோயிலில் சிவன் - பார்வதி சிலை சில ஆண்டுகளுக்கு முன்னர் திருடு போனது. அதேபோல, திருவண்ணாமலை மாவட்டம் பையூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் 3 சிலைகளும், வந்தவாசி சவுந்தர்யபுரம் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் இருந்த 4 சிலைகளும் கொள்ளையடிக்கப்பட்டன. இதேபோல், தமிழகத்தில் பல பகுதிகளில் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து தமிழக பொருளாதார குற்றப்பிரிவின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி பிரதீப் வி.பிலிப், ஐஜி பொன்.மாணிக்கவேல், டிஎஸ்பி சுந்தரம் தலைமையிலான போலீஸ் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி திரைப்பட இயக்குனர் வி.சேகர் உள்பட பலரை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். இதைதொடர்ந்து, மீண்டும் தமிழகத்தில் சிலை கடத்தல் நடப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார் கிடைத்தது. அதன்படி, சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலை முர்ரேஸ் கேட் சாலையில் உள்ள தீனதயாளன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் சில தினங்களுக்கு முன்னர் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு கடத்தி பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 கோடி மதிப்புள்ள 55 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சிலை கடத்தல் தொடர்பாக குமார் (60), மான் சிங் (55), ராஜா மணி (60) ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட வீட்டு உரிமையாளர் தீனதயாளன் தலைமறைவாகி விட்டார்.
உடந்தையாக இருந்த தமிழ் திரைப்பட நடிகை குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தீனதயாளன் வீட்டில் 2 அறைகள் பூட்டப்பட்ட நிலையில் இருந்தன. அதற்குள் பல சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகவும், கடத்தல் தொடர்பாக பல ஆவணங்கள் இருப்பதாகவும் போலீசார் சந்தேகித்தனர். ஆனால், நீதிமன்றத்தின் அனுமதி பெற்றே அறையை திறக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து, போலீசார் நேற்று முன்தினம் மாலை அனுமதி கேட்டு எழும்பூர் 10வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து சிலை தடுப்பு பிரிவு போலீசார் தீனதயாளன் வீட்டுக்கு நேற்று காலை 10 மணி அளவில் சென்றனர். வீட்டின் 2 அறைகளின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ஒரு அறையில் 10 அலமாரிகளில் சிறிய மற்றும் பெரிய அளவிலான உலோக சிலைகள்,
கற்சிலைகள் என நூற்றுக்கணக்கில் இருந்தன. போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். பிறகு என்னென்ன சிலைகள் என்பதை அங்கேயே வைத்து கணக்கெடுத்தனர்.
மொத்தம் சிறியதும் பெரியதுமாக 34 உலோக சிலை உள்பட 100 சிலைகள் போலீசாரிடம் சிக்கியது. அனைத்து சிலைகளும் சோழர்கால சிலைகள் என போலீசார் தெரிவித்தனர். சிலைகள் தவிர 42 ஓவியங்களும், ஏராளமான வெண்கல பாத்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தையும் தொல்லியல் துறை ஆய்வாளர் நாகசாமி தலைமையிலான அணியினர் ஆய்வு செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அனைத்தும் கலை வேலைப்பாடுகளுடன் கூடிய பழங்கால சிலைகள் என்பதால் இவற்றின் மதிப்பு பல நூறு கோடி ரூபாய் இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். சிலைகள் எவ்வகையைச் சேர்ந்தது, அதன் மதிப்பு போன்றவற்றை சிற்பிகள் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து மதிப்பிட்டு வருகின்றனர். நேற்று மாலை 6 மணியுடன் போலீசாரின் சோதனை முடிந்தது. இன்று காலை மீண்டும் தீன தயாளன் வீட்டில் சோதனையிட உள்ளனர். ஆழ்வார்பேட்டையில் நூற்றுக்கணக்கில் சாமி சிலைகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான மக்கள் வேடிக்கை பார்க்க திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிலை கடத்தல் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.