பர்ஸை பதம் பார்க்காமல் இருக்க கையேந்தி பவனில் கை நனைப்பவர்கள் ஒர் ரகம் என்றால், பர்ஸ் வெயிட்டாக இருந்தாலும், காரை நிறுத்தி விட்டு கையேந்தி பவனில் ரசித்து ருசிக்கும் ரகத்தினரும் ஏராளாம். இதனால், தெருவுக்குத் தெரு கையேந்தி பவன்கள் புற்றீசலாய் தோன்றி கல்லாக்கட்டுகின்றன. அட, மேட்டர் அதுவல்ல. இந்த கையேந்தி பவன்களில் எப்படியெல்லாம் டுபாக்கூர் வேலை நடக்கிறது என்கிற மெனு பட்டியலை படித்த பின் தயவு செய்து வாந்தி எடுத்து விடாதீர்கள்!
பொதுவாக இட்லி மெத்தென இருக்க வேண்டுமென்றால், ஒரு டம்ளர் இட்லி அரிசிக்கு கால் டம்ளர் உளுந்து தேவை. இரண்டையும் தனித்தனியாக ஊறவைத்து, தனித்தனியாகத்தான் அரைக்க வேண்டும். ஐந்து மணி நேரம் புளிக்க வைத்து, சுட்டால் பஞ்சு போன்ற இட்லி தயார். ஆனால் கையேந்தி பவனில் என்ன நடக்கிறது தெரியுமா?
கடை இட்லி அரிசி கால் பங்கு, ரேசன் அரிசி முக்கால் பங்கு, உளுந்து கால் பங்கு, ஜவ்வரிசி முக்கால் பங்கு, இரவு ஊறவைத்த பழைய சாதம் கொஞ்சம், எக்கச்சக்கமாக உப்பு... எல்லாவற்றையும் அரைத்து, மூன்று மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்து சுட்டால், இட்லி தயார். அந்த இட்லியும் மீந்துவிட்டால், அப்போதும் பிரச்னை இல்லை. அடுத்த நாள் அரைக்கிற மாவில் மீந்துபோன இட்லியைப் போட்டு அரைத்து விடுகிறார்களாம்.
தரமான சோறு என்றால், சோற்றுப்பருக்கையை விரலில் வைத்து மசித்தால் மை போல மசிய வேண்டும். அப்போது தான் அது வயிற்றுக்கு நல்லது. அப்படி இருந்தால் தான் வாடிக்கையாளர் நிறைய சாப்பிட்டு விடுவார்களே... அதற்காகத்தான் பெரும்பாலான ஹோட்டல்களில் முக்கால் பதத்தில் சாதத்தை வடித்து விடுகிறார்கள். சாதம் பளிச்சென்று வெண்மையாக இருக்கவும், அதிக நேரமானாலும் காய்ந்து போகாமல் இருக்கவும் சாதம் வேகும்போதே சுண்ணாம்புக் கல்லைத் துணியில் கட்டி சாதத்தில் போட்டுவிடுவார்கள். . அன்லிமிட்டெட் என அகலமாக போர்டில் எழுதி இருந்தாலும், இந்தச் சோற்றைக் குறிப்பிட்ட அளவுக்கு மேல் சாப்பிட முடியவே முடியாது!
பல ரோட்டுக் கடைகளில் மைதா மாவோடு சோடா உப்பு கலந்து, அதில் கழிவு டால்டாவை ஒரு பங்கு மாவுக்குக் கால் பங்கு டால்டா கணக்கில் (ஹோட்டலுக்கென்றே விற்கும் மலிவு விலை டால்டா!) கலந்தடித்தால் அரை மணி நேரத்தில் பரோட்டா ரெடி. பூப்போல பொலபொலவென்று பரோட்டா உதிரும். ஆனால், அத்தனையும் போங்கு பரோட்டா!
சிக்கன் கடையில் பொதுவாக கொழுப்பு, ஈரல், குடல், தலை, தோல், இதையெல்லாம் யாரும் வாங்க மாட்டார்கள். அதேபோல் மட்டன் கடையில் குடலோடு சேர்ந்து இருக்கிற ஒட்டுக்கொழுப்பு, ஒட்டுக்குடலையும் வாங்குவதை தவிர்த்து விடுவார்கள். இதை எல்லாம் தூக்கிப்போடாமல் ஓரமாகக் குவித்து விடுவார்கள். பழக்கமான கடைக்காரராக இருந்தால் விசாரித்துப் பாருங்கள். ‘ஹோட்டல்காரங்க மொத்தமா வாங்கிட்டுப் போயிடுவாங்க’னு என எதார்த்தமாக சொல்லுவார்கள். அரைக் கிலோ கறியோடு இவை எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாகப் போட்டு தூக்கலாக கறி மசாலா, மிளகாய்த் தூள், கொத்தமல்லித்தூள், கொஞ்சம் மரத்தூள் அல்லது குதிரை சாணத்தூள் கலந்து, அஞ்சு ஸ்பூன் அஜினாமோட்டா கலந்து கொதிக்கவைத்தால் அண்டா நிறைய திக்கான சால்னா ரெடி!
ஒரு முக்கியமான எச்சரிக்கை... தலையே போனாலும் சரி, ரோட்டுக் கடைகளில் தலைக்கறி மட்டும் சாப்பிடவே கூடாது. பொதுவாகவே செம்மறி ஆட்டின் தலையில் புழுக்கள் இருக்கும். இது இயற்கையான விஷயம்தான். வீடுகளுக்கு வாங்குகிற போது, பெரும்பாலும் வெள்ளாட்டுத் தலையைத் தான் வாங்குவோம். செம்மறி ஆட்டுத் தலை வாங்கினாலும் கடைக்காரர் நமது கண்களில் படாமல் தலையைக் கொதிக்கிற தண்ணீரில் போட்டுவிட்டு, பிறகு அதை எடுத்து தரையில் தட்டோ தட்டென்று தட்டி புழுக்கள் எல்லாவற்றையும் கொட்டிட்டுத்தான் மேலே எடுத்து வைப்பார். அதை வீட்டுக்கு வாங்கிப்போய் நன்றாக சுத்தம் செய்து பிறகு சாப்பிடுவோம். ஆனால், மொத்தமாக ஹோட்டல்களுக்கு விற்கும்போது செம்மறி ஆட்டுத் தலையை இப்படி சுத்தம் செய்ய மாட்டார்கள். அப்படியே கைமாதான்.
சாதாரண ஹோட்டல்களிலும், கையேந்தி பவன்களிலேயுமே இப்படிஎன்றால் டாஸ்மாக் பாரில் விற்கும் ஐட்டத்தைபற்றி சொல்லவேண்டுமா என்ன?

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.