Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 24, 2016

இடிக்காமல் வீட்டை உயர்த்தி அசத்தல் நவீன தொழில்நுட்பம் கைகொடுத்தது


பெரம்பலூர்: பெரம்பலூர் ரோஸ் நகர் பகுதியில் வசிப்பவர் செல்வதுரை. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர். கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் ரூ.5 லட்சத்தில் கட்டிய வீட்டில் மனைவி ஜெயராணி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வருகிறார். செல்வதுரையின் வீட்டுக்கு முன்புறம் உள்ள சாலை சீரமைப்பு பணி காரணமாக உயர்ந்து கொண்டே வருகிறது. தற்போது வீட்டு வாசலை விட ஓரடிக்கு மேல் உயர்ந்து காணப்படுகிறது. இதனால் மழைநீர், கழிவு  நீர் வீட்டிற்குள் புகுந்து வந்தது. ஆனால் அதே நேரத்தில் ராசியான இந்த வீட்டை விற்கவோ, இடித்து விட்டு புதிதாக கட்டவோ செல்வதுரை விரும்பவில்லை. எனவே வீட்டை இடிக்காமல் ஜாக்கிகளை கொண்டு அப்படியே உயர்த்தி அமைக்கவும், இடம் பெயர்த்து வேறு இடத்தில் அமைக்கவும் தொழில்நுட்ப வசதிகளை கொண்ட தனியார் நிறுவனத்தை அணுகினார்.

அரியானாவில் உள்ள அந்நிறுவன சென்னை பிரிவின் பொறியாளர் குரு நேரில் வந்து பார்வையிட்டு ரூ.2 லட்சம் செலவில் வீட்டை உயர்த்துவதாக கூறினார். அதன்படி 40 நாட்களுக்கு முன் வீட்டை உயர்த்தி அமைக்கும் பணிகள் தொடங்கியது. முதலில் 1000 சதுர அடி பரப்பளவு கொண்ட வீட்டை சுற்றிலும் உள்ள தரைப்பகுதி தோண்டப்பட்டது. பின்னர் கட்டிடத்திற்குக் கீழே 4 பகுதிகளிலும், நடுவிலும் என 100க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைட்ராலிக் ஜாக்கிகள் பொருத்தப்பட்டன.
பின்னர் தூக்கி உயர்த்தப்பட்ட கட்டிடத்தின் கீழ் 3 அடி உயரத்திற்கு புதிதாக செங்கல் வைத்து கான்கிரீட் கட்டுமான பணிகள் நடந்து வந்தது. இப்பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது.

செல்வதுரை கூறுகையில், இது எனது மகன்களுக்கு பிடித்த ராசியான வீடு. அத்தோடு புதிய வீட்டைக்கட்ட கூடுதலாக செலவாகும் என்பதால் உயர்த்தி அமைக்க முடிவெடுத்தேன் என்றார். இந்த வீட்டை பொதுமக்களும், பொறியாளர்களும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.