தென்கிழக்கு ஆசிய தீவுகளைச் சேர்ந்த மீனவர்களைப் பயன்படுத்தி, மலிவான விலைக்கு மீன்களை எடுத்து வந்து அமெரிக்காவில் விற்பதோடு, அந்த மீனவர்களையும் பிடித்து வைத்து வேலை வாங்குவது தொடர்ந்து நடைபெறும் மிகப்பெரிய அடிமை வியாபாரம். 2-3 ஆண்டுகளாக தொடர் விசாரணை மேற்கொண்டு, மறைக்கப்பட்ட பல உண்மைகளை கண்டறிந்துள்ளனர் அசோசியேட் பிரஸ் நிருபர்களான எஸ்தர் ஹுட்சன், மார்த்தா மென்டோசா, ராபின் மெக்டோவெல் மற்றும் மார்ஜி மேசன். தென்கிழக்கு ஆசியப் பகுதி மீன்பிடிதொழிலில் அதிகரித்துவரும் அடிமைகளின் அவலத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த இந்த 4 நிருபர்களுக்கும் புலிட்சர் பரிசு கிடைத்துள்ளது!
2014ல் இந்தோனேசிய தலைநகரிலிருந்து 3 ஆயிரம் கிலோமீட்டர் தாண்டி அமைந்துள்ள பென்ஜினா தீவுக்கு இரு நிருபர்கள் பயணம் மேற்கொண்டதன் மூலமே இந்த முயற்சி தொடங்கப்பட்டது. மியான்மர், கம்போடியா, லாவோஸ் மற்றும் தாய்லாந்திலிருந்து கொண்டுவரப்பட்டு, தங்களை அடித்து உதைத்து துன்புறுத்தி கட்டாயமாக வேலை வாங்கிய கொடுமைகளை அங்கிருந்த ஏழைத் தொழிலாளிகள் கதை கதையாக கூறினர்.
பொய்யான பெயர்களில் ஏராளமான தொழிலாளர்களை மறைத்து வைத்துள்ள இடத்தையும், பென்ஜினா தீவிலிருந்து மீன்களை எப்படி குளிர்பதன சேமிப்புக்கிடங்குகள் உள்ள கப்பல்களில் தாய்லாந்துக்கு கொண்டு செல்கிறார்கள், பதப்படுத்தப்பட்ட கடல் உணவுகள் வால்மார்ட் போன்ற பெரும் வணிகர்களுக்கு எப்படி விற்கப்படுகிறது, அங்கு தொழிலாளர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் உள்பட அவர்கள் கூறிய தகவல்களை செயற்கைக்கோள் உதவியுடன் கண்காணித்து உறுதிப்படுத்தி பதிவும் செய்தனர்.
“கைதிகளாக சிக்கியிருப்பவர்களுக்கு எந்த ஆபத்தும் நேராத வகையில் கவனமாக மேற்கொண்ட விசாரணையில், கணிசமான ஆபத்துகளையும் நாங்கள் சந்திக்காமல் இல்லை” என்கிறார்கள் இந்த நால்வரும். இருட்டுப் பகுதிகளில் கைதிகளின் நிலையை படமாக்கிய இப்பெண்களின் படகை அடையாளம் கண்ட பாதுகாப்புப் படையினர் கடுமையான தாக்குதலை மேற்கொண்டனர். இப்படி பல போராட்டங்களை எதிர்கொண்ட இவர்களின் முயற்சியே, 15 வயதுக்கு உட்பட்ட நூற்றுக்கணக்கான இளம் அடிமைகள் உட்பட ஆயிரக்கணக்கானோருக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தது.
மார்த்தா மென்டோசாவுக்கு இது 2வது புலிட்சர் பரிசு. 2000ம் ஆண்டில் தென்கொரிய சிவில் போரில் அமெரிக்க படைகளால் நடத்தப்பட்ட வெகுஜன கொலைகளை ‘The Bridge at No Gun Ri’ எனும் தலைப்பில் வெளியிட்டதன் மூலம் முதல் புலிட்சர் பரிசை மென்டோசா பெற்றார். 2012ல் நியூயார்க் போலீஸ் துறை முஸ்லீம்களுக்கு எதிராக நடத்திய உளவு நடவடிக்கைகளை கண்டறிந்ததற்காக, 2013ல் நடைபெற்ற சிரியா போரின் புகைப்படங்களை வெளியிட்டதற்காக என 50க்கும் அதிக புலிட்சர் பரிசுகளை அசோசியேட் பிரஸ் நிருபர்கள் குவித்துள்ளனர்!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.