Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 6, 2016

காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை: காதலி வீட்டை நொறுக்கிய நண்பர்கள்


காதல் தோல்வியால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த அவரது நண்பர்கள் காதலி வீட்டை அடித்து  நொறுக்கி சூறையாடினர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் 9வது தெருவை சேர்ந்தவர் ரவிகுமார்.  இவரது மகன் முத்துகுமார்(23). பி.இ. முடித்துவிட்டு  சென்னையில் உள்ள தனியார் செல்போன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததாக  கூறப்படுகிறது. காதல் விவகாரத்தை அறிந்த பெண்ணின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அத்துடன் தனது வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் கேரளாவுக்கு  சென்றுவிட்டார். அங்கு கடலை மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார். இருப்பினும் அடிக்கடி கேரளாவில் இருந்து கோவில்பட்டிக்கு வந்து சென்றுள்ளார்.

இதனிடையே மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். இதுபற்றி அறிந்த முத்துக்குமார், மனவேதனையில் இருந்துள்ளார்.  மேலும் அவர் காதலியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தெரிகிறது. இதனால் அவர் மேலும் விரக்தியடைந்தார். இந்த நிலையில், தனது காதல்  தோல்வியில் முடிந்ததை எண்ணிய முத்துகுமார் நேற்றுமுன்தினம் அவர் தங்கியிருந்த இடத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல்  சென்னையில் இருந்து கோவில்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது. முத்துகுமார் தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்த அவரது நண்பர்கள் கடும் கோபம்  அடைந்தனர்.

முத்துக்குமாரின் காதலி வீட்டிற்கு சென்றனர். கதவை உடைத்து உள்ளே புகுந்த அவர்கள், வீட்டில் உள்ள டி.வி., பர்னிச்சர்கள், பைக் ஆகியவற்றை அடித்து  நொறுக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி மேற்கு போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று விசாரணை  நடத்தினர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து வீட்டை சேதப்படுத்தி முத்துகுமாரின் நண்பர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.