Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 3, 2016

அதிகரிக்கும் ஹைட்ரஜன் கார்கள்!


ஓட்டுனரில்லாத வாகனங்கள், மின்சார கார்கள் போன்றவைக்கே அதிக பிரபலம் கிடைக்கின்றன. ஆனால், சத்தமில்லாமல் ஹைட்ரஜன் கார்களும் சந்தைக்கு வர தயாராகி வருகின்றன. அமெரிக்காவின் கலிபோர்னிய மாகாணத்தில், 12க்கும் மேற்பட்ட, 'ட்ரூ ஜீரோ' என்ற ஹைட்ரஜன் நிரப்பும் பங்குகள் துவங்கப்பட்டுள்ளன. விதிமுறைகள் குறுக்கே வருவதால் ஏற்கனவே உள்ள பெட்ரோல் பங்குகளுக்குள்ளேயே ஹைட்ரஜன் பங்குகளை வைக்க வேண்டியிருப்பதாக ட்ரூ ஜீரோ அதிகாரிகள் புலம்புகின்றனர். ஹைட்ரஜன் வாகனங்கள் புகை வெளியேற்றாது என்பதால் இதற்கும் மின் வாகனங்களைப் போல சலுகைகள் தரவேண்டும் என்று ஹைட்ரஜன் கார் தயாரிப்பாளர்கள் கோரி வருகின்றனர். டொயோட்டா, தன் 210 'மிராய்' ஹைட்ரஜன் கார்களை கலிபோர்னியாவில் மட்டும் விற்றுள்ளது. ஹூண்டாய் தனது பிரபலமான, 'டக்சன்' கார் மாடலில் ஹைட்ரஜன் இயந்திரத்தை வைத்து அறிமுகப்படுத்தியது. அது தற்போது 100 ஹைட்ரஜன் டக்சன்களை கலிபோர்னியாவில் விற்பனை செய்துள்ளது. ஹோண்டாவின், கிளாரிட்டி எப்.சி.வி., என்ற ஹைட்ரஜன் கார் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரவிருக்கின்றன. ஹைட்ரஜன் கார்கள் அதிகம் விற்கவேண்டுமானால், அதிகமான ஹைட்ரஜன் பங்குகள் இருக்க வேண்டும். எனவே, டொயோட்டா, ஹூண்டாய் போன்றவை, ட்ரூ ஜீரோ போன்ற ஹைட்ரஜன் பங்குகளுக்கு பல லட்சம் டாலர்களை கடனுதவியாக தந்து ஊக்குவிக்கின்றன. டீசல் வாகனங்களுக்கு உலகெங்கும் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், ஹைட்ரஜன் வாகனங்கள் வந்தால் அந்த இடத்தை பிடித்துக்கொள்ளும் என்று நம்பலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.